
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை இன்று சந்தித்தப் பேசினார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்கே, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களைச் சந்தித்துப் பேச திட்டமிட்டிருந்தார்.
அதன் ஒரு பகுதியாக இன்று டெல்லி சென்ற ரணில் விக்ரமசிங்கே, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
சோனியா காந்தி, தோள்பட்டை காயத்திற்கு சிகிச்சை பெற்ற பிறகு, கடந்த இரு மாதங்களாக எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்த நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இன்று, இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, சோனியா காந்தி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.