மாணவியின் கண்ணை பேனாவால் குத்திய ஆசிரியர்... வீட்டுப்பாடம் செய்யாததால் ஏற்பட்ட விபரீதம்...

Asianet News Tamil  
Published : Oct 06, 2016, 02:22 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
மாணவியின் கண்ணை பேனாவால் குத்திய ஆசிரியர்... வீட்டுப்பாடம் செய்யாததால் ஏற்பட்ட விபரீதம்...

சுருக்கம்

வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் ஒருவர், மாணவியின் கண்ணை பேனாவால் குத்திய சம்பம் ஆந்திராவில் நடந்துள்ளது. இதனால், அந்த மாணவி பார்வை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், காங்கிரிக்கு அருகில் பி.சி. பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், தேசரி சனிகா என்ற மாணவி படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த 14 ஆம் தேதி வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளி வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அந்த தேசரியிடம் ஆசிரியர், ஏன் வீட்டுப்பாடல் செய்யவில்லை என்று கேட்டுள்ளார். இதற்கு மாணவி சரியான பதிலளிக்காத காரணத்தினால், ஆசிரியர் கையில் வைத்திருந்த பேனா கொண்டு சிறுமியின் இடது கண்ணைக் குத்தியதாக தெரிகிறது.

வலியால் துடித்த சிறுமியை, அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரின் இடது கண் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். 

மாணவியின் கண்ணை, பேனாவால் குத்திய ஆசிரியை, தலைமறைவாகி உள்ளார்.இதையடுத்து, ஆசிரியர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறார் நீதிச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்வதோடு, சிறுமி தாழ்ந்த வகுப்பினைச் சார்ந்தவர் என்பதால், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்முறை தடுப்புச் சட்டத்தின்கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பச்சை பொய்.. இந்தியா குறித்து வங்கதேச போலீஸ் புகாரை தவிடுபொடியாக்கிய BSF!
பத்மஸ்ரீ, பாரத ரத்னா-ன்னு பேருக்கு முன்னாடி போடக்கூடாது! கறார் காட்டிய உயர் நீதிமன்றம்!