வேட்புமனு தாக்கல் செய்தார் ராம்நாத் கோவிந்த்!! - ஓபிஎஸ்,இபிஎஸ் பரிந்துரை...

 
Published : Jun 23, 2017, 12:16 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
வேட்புமனு தாக்கல் செய்தார் ராம்நாத் கோவிந்த்!! - ஓபிஎஸ்,இபிஎஸ் பரிந்துரை...

சுருக்கம்

ram nath kovindh nominated in president election

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பேட்பாளர் ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்ற மக்களவை செயலாளரிடம், தனது வேட்பு மனுவை  தாக்கல் செய்தார். அப்போது, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பரிந்துரை செய்தனர். அது மட்டுமன்றி பல்வேறு கட்சிகளின் ஆதரவு பெற்றுள்ள ராம்நாத் கோவிந்த் 60 சதவீத வாக்குகள் பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் மீரா குமார் போட்டியிடுகிறார். இவருக்கு தமிழகத்தில் திமுகவினரும், மற்ற மாநிலங்களின் தலைவர்களான லாலு பிரசாத், மாயாவதி, மம்தா பானர்ஜி உள்ளிட்டேளாரும் பரிந்துரை செய்ய உள்ளனர்.

இன்னும் ஓரிரு நாட்களில் மீரா குமாரும், வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இரு தரப்பினரும் தலித் வேட்பாளர்களையே நிறுத்தியிருப்பதால், குடியரசு தலைவர் தேர்தல் தலித்துக்கும் மற்றொரு தலித்துக்குமான போட்டியாக மாறியுள்ளது. இதனால், குடியரசு தலைவர் பதவியையும் அரசியலாக்கிவிட்டனர் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பால் பொருட்களில் கலப்படம் அதிகரிப்பு! நாடு முழுவதும் ரெய்டு நடத்த FSSAI அதிரடி உத்தரவு!
ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!