அரசாங்கமோ அல்லது ராமர் கோவில் அறக்கட்டளையோ யாருக்கும் விஐபி நுழைவுச்சீட்டுகளை அனுப்புவதில்லை என்பதை பக்தர்கள் நினைவில்கொள்ள வேண்டும்.
ராமர் கோயில் திறப்பு விழா நாளான ஜனவரி 22ஆம் தேதி மக்கள் அயோத்திக்கு நேரில் வரவேண்டாம் என்றும் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தச் சூழலை ஹேக்கர்களும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். ராமர் கோயிலுக்குச் செல்ல இலவச விஐபி டிக்கெட் கிடைக்கும் என்று கூறி மோசடிக்காரர்கள் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்புவதாக பல பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
ராமர் கோயிலுக்குச் செல்ல விஐபி டிக்கெட் கிடைக்கும் என்று வரும் போலியான வாட்ஸ்அப் மேசேஜ்கள் மொபைலில் ஸ்பைவேர் அல்லது மால்வேர் மென்பொருளை APK கோப்பைப் பதிவிறக்கம் செய்யக்கூடும்.
மோடி ஆட்சியில் மக்கள்தொகையில் ஏழைகள் எண்ணிக்கை 24.82 கோடி குறைவு: நிதி ஆயோக் தகவல்
“ஜனவரி 22 அன்று ராமர் கோயில் திறப்பு விழாவில் நீங்கள் விஐபி டிக்கெட் பெற்றதற்கு வாழ்த்துகள். இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து விஐபி பாஸைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்” என்று மோசடிக்காரர்கள் மெசேஜ் அனுப்புகிறார்கள்.
ஸ்பைவேர் அப்ளிகேஷன் மூலம் ஹேக்கர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், மொபைல் எண்கள் உள்ளிட்ட பயனர்களைப் பற்றிய முக்கியமான தரவுகளைப் பெற முடியும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் நிதி மோசடி செய்யவும் வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அரசாங்கமோ அல்லது ராமர் கோவில் அறக்கட்டளையோ யாருக்கும் விஐபி நுழைவுச்சீட்டுகளை அனுப்புவதில்லை என்பதை பக்தர்கள் நினைவில்கொள்ள வேண்டும். அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்வதற்காக மோசடிக்கு வழிவகுக்கும் செயலிகளை பதிவிறக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
அயோத்தி ராமர் கோயிலில் இருந்து இலவச பிரசாதத்தை வழங்குவதாகவும் சில இணையதளங்கள் வந்துள்ளன. கூரியர் கட்டணமாக 50 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும், அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் வீடு தேடி வரும் என்று அந்த இணையதளங்கள் வாக்குறுதி அளிக்கின்றன. இந்த இணையதளங்கள் உண்மையானவையா இல்லையா என்பது இன்னும் உறுதியாகாத நிலையில், பக்தர்கள் ஆன்லைனில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
வீடியோ: விமானியை ஆக்ரோஷமாகத் தாக்கிய பயணி! விமானம் தாமதமாகப் புறப்பட்டதால் ஆத்திரம்!