ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தியில் ரயில் சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ரயில் பாதை இரட்டிப்பு மற்றும் மின்மயமாக்கல் செய்யப்பட்டு வருவதால், ஜனவரி 16ஆம் தேதி (நாளை) முதல் 22ஆம் தேதி வரை பாதிக்கப்படும் என ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் உட்பட 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, டூன் எக்ஸ்பிரஸ் உட்பட 35 ரயில்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்படும். மேலும் 14 ரயில்களின் இயக்கமும் பாதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
அயோத்தி கான்ட் முதல் ஆனந்த் விஹார் வரை இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஏற்கனவே நடந்து வரும் பணிகளுக்காக ஜனவரி 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இது வருக்கிற 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் என்று வடக்கு ரயில்வே, லக்னோ கோட்டத்தின் மூத்த கோட்ட வணிக மேலாளர் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார்.
கும்பாபிஷேக விழாவிற்கு அதிக முன்னுரிமை அளித்து அயோத்தி ரயில்வே கோட்டத்தை இரட்டிப்பாக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு வாகனம் ஒரு ஃபாஸ்டேக்: ஜன., 31ஆம் தேதிதான் கடைசி நாள்!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இதனிடையே, கும்பாபிஷேக விழாவுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் திறக்கப்படுவதையொட்டி அயோத்தியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.