5,000 முதலீடு..இன்று 41 ஆயிரம் கோடி சொத்து - யார் இந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ?

By Raghupati RFirst Published Aug 14, 2022, 5:30 PM IST
Highlights

தனது கல்லூரி காலத்திலேயே பங்குச்சந்தையில் நாட்டம் கொண்ட ராகேஷ், 1985ஆம் ஆண்டில் ரூ.5,000 பங்குச்சந்தையில் முதலீடு செய்தார்.

இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளராக கருதப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, நேற்று இறந்தார். ‘இந்தியாவின் வாரன் பஃபெட்’ என அழைக்கப்படுகிறார். தனது கல்லூரி காலத்திலேயே பங்குச்சந்தையில் நாட்டம் கொண்ட ராகேஷ், 1985ஆம் ஆண்டில் ரூ.5,000 பங்குச்சந்தையில் முதலீடு செய்தார். இந்த முதலீடு படிப்படியாக வளர்ந்து 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் ரூ.11,000 கோடியாக மதிப்பு உயர்ந்துள்ளது.

ஹங்காமா மீடியாஸ் அப்டெக், வைசராய் ஹோடல், கான்கார்டு பயோடெக் போன்ற நிறுவனங்களின் தலைவராக இருந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, ஏர் ஆகாச என்ற புதிய விமான போக்குவரத்து சேவை நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் முதல் விமான சேவை ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்கேற்றார். 

மேலும் செய்திகளுக்கு..அந்த வார்த்தை சொன்ன பிடிஆர்.. கடுப்பான பாஜகவினர் - வெளியான அதிர்ச்சி தகவல் !

இதுவே இவர் பங்கேற்ற கடைசி பொது நிகழ்வாகும். பல்வேறு உடல்நல கோளாறுகளால் சிக்கித் தவித்து வந்த ராகேஷ், நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவரின் சிறுநீரகம் முற்றிலுமாக செயலிழந்து உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை அதிகாரி ராதே ஷ்யாம் ஜுன்ஜுன்வாலாவின் மகனாக ராகேஷ், 1960ம் ஆண்டு பிறந்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ஷெகாவத் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் மும்பையில் தான் வளர்ந்தார். சைடன்ஹாம் கல்லூரியில் பட்டயக் கணக்காளர் பட்டம் பெற்றார். இதனாலேயே ஜுன்ஜுன்வாலா இந்தியாவின் பங்குச் சந்தையைப் பற்றி எப்பொழுதும் அறிந்து வைத்திருந்தார்.

1985ம் ஆண்டு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதே பங்குச்சந்தைகளில் முதலில் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ததன் மூலமாக தனது பயணத்தை ஆரம்பித்தார்.  இவர் முதலீடு செய்ய ஆரம்பித்த அந்த காலகட்டத்தில் பிஎஸ்இ இன்டெக்ஸ் 150 புள்ளிகளாக இருந்த நிலையில், தற்போது 60,000 புள்ளிகள் என்ற லெவலில் காணப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..“ஜெயலலிதா இருந்திருந்தால்.. செருப்படி விழுது தலைவரே.!” குமுறும் திமுகவினர் !

டாடா டீ, சேஷ கோவா போன்ற சிறிய அளவிலான நிறுவனங்களில் முதலீடு செய்து வந்தார். அதில் வெற்றி கண்டதை அடுத்து டைட்டன், ஸ்டார் ஹெல்த், டாடா மோட்டார்ஸ் மற்றும் மெட்ரோ பிராண்ட்ஸ் போன்ற நிறுவனங்களில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்தார். 1986 ஆம் ஆண்டு டாடா டீயின் 5,000 பங்குகளை ரூபாய் 43-க்கு வாங்கினார். அடுத்தடுத்தடுத்து 3 மாதங்களிலேயே அதன் விலை 143 ரூபாய் வரை உயர்ந்தது. 

கடைசியாக 3 வருடங்கள் கழித்து டாடா டீயின் பங்குகளை 25 லட்சம் ரூபாய் வரை விற்று தனது முதல் லாபத்தை சம்பாதித்தார். கல்வி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்டெக் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகித்து வந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, சுமார் 43 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 சதவீத பங்குகளை வைத்திருப்பதாக கூறப்படுகிறது

ஜுன்ஜுன்வாலாவின் சொத்து மதிப்பு 5.8% பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் சுமார் 46,000 கோடி ரூபாயாகும். இந்தியாவின் 48வது பணக்காரராவர். இவருக்கு ரேகா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.மகள் நிஷ்தா ஜுன்ஜுன்வாலா 2004ம் ஆண்டும், இரட்டை மகன்களான ஆர்யமன் மற்றும் ஆர்யவீர் 2009ம் ஆண்டும் பிறந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை கதி? நாங்க யாருக்கு சிலை வைப்போம் தெரியுமா ? அண்ணாமலை அதிரடி

click me!