3 மடங்கு குறைவான செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டிய பாஜக... காங்.-ஐ சாடிய ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்!!

By Narendran SFirst Published Mar 31, 2023, 5:27 PM IST
Highlights

பாஜக தலைவர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கடுமையாக சாடியுள்ளார்.  

பாஜக தலைவர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கடுமையாக சாடியுள்ளார்.  இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில்,  சோனியாவின் ரிமோட் கண்ட்ரோலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2012 இல் புதிய நாடாளுமன்றத்திற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு சுமார் 3000 கோடி ரூபாய் செலவாகும் என்று அப்போது விவாதிக்கப்பட்டது. பல தசாப்தங்களாக காங்கிரஸ் ஆட்சியில் கமிஷன்கள் பொதுவானவை. இன்று காங்கிரஸ் போராடி வருகிறது.

இதையும் படிங்க: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கடும் கண்டனம்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு 3,000 கோடி ரூபாய் செலவகும் என்றிருந்த நிலையில் தற்போது 971 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுவது காங்கிரஸ் உள்ளிட்ட எதிரணியினரை நடுங்க வைத்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மதிப்பீடு 3,000 கோடி ரூபாயில் இருந்து வெறும் 971 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 2014 இல் மத்தியில் நேர்மையான ஆட்சியைக் கொண்டு வந்ததற்காக மோடிஜிக்கு பாராட்டுகள்.

இதையும் படிங்க: இந்தியாவுல இயங்கும் இந்த ரயிலுக்கு டிக்கெட் தேவையில்லை.. 1 பைசா செலவில்லாமல் போய்ட்டு வரலாம்..!!

புதிய நாடாளுமன்றம் மற்றும் சென்ட்ரல் விஸ்டாவை, மக்கள் விருப்பத்தின் சின்னமாக நாடு கருதுகிறது. இது காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த டிவிட்டர் பதிவோடு 2012ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் முன்மொழியப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டிடம் குறித்த விவரங்களையும் பகிர்ந்துள்ளார்.

click me!