ரஃபேல் போர் விமானத்துக்கு நாளை ‘ஆயுதபூஜை’: ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றார்

By Selvanayagam PFirst Published Oct 6, 2019, 11:46 PM IST
Highlights

ரஃபேல் போர் விமானத்துக்கு நாளை ஆயுதபூஜை(சாஸ்த்ரா பூஜை) செய்வதற்காகவும், தசரா பண்டிகையை கொண்டாடவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார்.

பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக கடந்த 2016 செப்டம்பர் மாதம் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தின்படி முதல் போர் விமானம் இந்திய விமானப் படை அதிகாரியிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அந்த விமானத்துக்கு ஆர்பி-01 என்ற பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 8-ம் தேதி பிரான்ஸ் செல்லும் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ரஃபேல் போர் விமானம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டுக்குள் அனைத்து விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டு சென்றார். பிரான்ஸில் உள்ள துறைமுக நகரான போர்டாக்ஸில் நாளை நடக்கும் ஆயுத பூஜையில் ராஜ்நாத் சிங் பங்கேற்று ரஃபேல் போர் விமானத்துக்கு பூஜை செய்ய உள்ளார்

நாளை காலை பாரடாக்ஸ் நகரம் செல்லும் முன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரனை பாரீஸிஸ் சந்திக்கிறார். அவருடன் ரஃபேல் விமானங்கள் தொடர்பாகவும், பாதுகாப்பு, ஆயுதங்கள் தொடர்பாகவும் பேச்சு நடத்துகிறார். இந்த சந்திப்புக்குப்பின் ராஜ்நாத் சிங் பார்டாக்ஸ் நகரம் சென்று ரஃபேல் விமானத்துக்கு நடக்கும் பூஜையில் பங்கேற்கிறார்.

டசால்ட் நிறுவனத்தில் செவ்வாய்கிழமை நடக்கும் நிகழ்ச்சியில் டசால்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக முதல் ரஃபேல் விமானத்தை ராஜ்நாத்சிங்கிடம் ஒப்படைக்கிறது. மற்ற விமானங்கள் அடுத்த ஆண்டுக்குள் வந்து சேரும்.

click me!