நாங்கள் ஆட்சிக்கு வந்ததும்... கொந்தளித்த சிவசேனா தலைவர்...!

By Asianet TamilFirst Published Oct 6, 2019, 10:56 AM IST
Highlights

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஆரே வன கொலைகாரர்கள் மீது சிறந்த முறையில் நடவடிக்கை எடுப்போம் என சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஆரே வன கொலைகாரர்கள் மீது சிறந்த முறையில் நடவடிக்கை எடுப்போம் என சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகரில் சஞ்சய்காந்தி என்ற மிகப்பெரிய வனம் உள்ளது. இந்த பகுதிக்கு அருகே குடியிருப்பு பகுதியான ஆரே உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் உள்ளது. மெட்ரோ 3 ரயில் கட்டுமான பணிகளுக்காக இந்த பகுதியில் உள்ள 2,500 மரங்களை வெட்ட மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது.  இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து மெட்ரோ பணிக்காக ஆரே பகுதியில் உள்ள மரங்களை வெட்டும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் அன்று இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அங்கு வந்த சிவசேனா பெண் தலைவர் பிரியங்கா சதுர்வேதி உள்பட 29 பேரை போலீசார் காவலில் வைத்தனர். இதனால் இந்த விவகாரம் மேலும் பெரிதானது.

இந்நிலையில், ஆரே பகுதியில் மரம் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டத்துக்கு சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், அடுத்து அமையும் அரசு நமது அரசு. மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஆரே வன பகுதி கொலைகாரர்கள் (மரங்களை வெட்டியவர்கள்) மீது சிறப்பான நடவடிக்கை எடுக்கப்படும். . இது முக்கியமான பிரச்னை அதனால் இது குறித்து பேச தயங்க மாட்டேன் என அதில் பதிவு செய்துள்ளார்.

click me!