எகானமி கிளாஸில் பயணித்த இஸ்ரோ சிவன்: பயணிகள் உற்சாக வரவேற்பு: செல்பி எடுத்து உற்சாகம்

By Selvanayagam PFirst Published Oct 6, 2019, 12:01 AM IST
Highlights

விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணிக்க வந்த இஸ்ரோ தலைவர் சிவனுக்கு பயணிகள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.
 

90 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவை பயணி ஒருவர் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அது தற்போது வைரலாகி வருகிறது

ரூ.978 கோடி ரூபாய் செலவில் சந்திரயான்-2 விண்கலத்தை சிவன் தலைமையிலான இஸ்ரோ உருவாக்கியது. நிலவின் வடதுருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

 சந்தியான்-2 விண்கலம் நிலவின் வடதுருவத்தில் தரைப்பகுதியில் தரையிறங்கும் போது, 2.1 கிலோமீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தபோது அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. சந்திரயான்-2 திட்டம் ஏறக்குறைய 98 சதவீதம் வெற்றி என்றபோதிலும் கடைசிவரை விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை.

சந்திரயான்-2 விண்கலம் எதற்காக அனுப்பப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாவிட்டாலும்கூட உலகத்தேயே இந்தியா பக்கம் இஸ்ரோ திருப்பவைத்தது. இந்த திட்டம் தோல்வி அடைந்தபோதிலும், விக்ரம் லேண்டர் தரையிறங்கும் காட்சியைக் காண வந்திருந்த பிரதமர் மோடி அதைக் காணமுடியாமல் திரும்பினார். இருப்பினும் இஸ்ரோ தலைவர் சிவனை கட்டித்தழுவி ஆறுதல் தெரிவத்து சென்றார்.

சந்திரயான்-2 திட்டம் மூலம் இஸ்ரோ தலைவர் சிவன் பெரும்பாலன மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இந்த சூழலில் இஸ்ரோ சிவன் 4-ம்ததேதி பெங்களூருவில் இருந்து இன்டிகோ விமானம் மூலம் சாதாரண வகுப்பில் பயணித்தார். அப்போது விமானத்தில் இஸ்ரோ தலைவர் சிவனைப் பார்த்த விமானப் பணிப்பெண்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சந்திரயான்-2 திட்டத்துக்காக சிவனுக்கு பாராட்டு தெரிவித்தனர். அதன்பின் விமானத்துக்குள் நடந்து வந்த சிவனுக்கு பயணிகள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். பயணிகளின் வரவேற்பை சிவன் ஏற்றுக்கொண்டார். இதை ஒரு பயணி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இஸ்ரோவின் தலைவரான சிவன் விமானத்தில் சாதாரண வகுப்பில் மக்களோடு மக்களாக பயணித்த காட்சியையும், பயணிகள் அளித்த வரவேற்பையும் பார்த்து நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்

click me!