ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நளினி ஸ்ரீஹரன் தன்னை விடுவிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நளினி ஸ்ரீஹரன் தன்னை விடுவிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஆர்.பி.ரவிச்சந்திரனும் தன்னையும் விடுவிக்கக்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுக்கும் சேர்த்து நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்தியாவின் குரல் உலகளவில் கவனிக்கப்பட பிரதமர் மோடியே காரணம்! மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீது கடந்த மே 18ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில் நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, "ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு. ஆளுநர் முடிவை தாமதப்படுத்தினால், அதனை நீதிமன்றம் பரிசீலனை செய்யலாம். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ஆவது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறது" என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டியும், ஆளுநர் உத்தரவில்லாமல் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளான ரவிச்சந்திரன், நளினி ஸ்ரீஹரன் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 17ம் தேதி மனுவை தள்ளுபடி செய்தது.
tirumala tirupati:மயங்கி விழாதிங்க!திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் சொத்து மதிப்பு என்ன? வெளியானது உண்மை தகவல்
ஆனால், மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் “அரசியலமைப்புச் சட்டம் 226 பிரிவின்படி, உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை. அரசியலமைப்புச் சட்டம் 142 பிரிவை உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியதுபோல் நாங்கள் பயன்படுத்த முடியாது” எனக் கூறி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஸ்ரீஹரன் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், “ பேரரறிவாளன் விடுதலையைச் சுட்டிக்காட்டி தங்களையும் விடுதலை செய்ய வேணடும்”எனத் தெரிவித்திருந்தனர்.
பரபரப்பு !! சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 3 ஐஐடி மாணவர்கள் உட்பட 7 பேர் பலி..
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.காவே, பி.வி.நாகரத்னா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு, மத்திய அரசு இந்த மனுவுக்கு பதில் மனுத் தாக்கல் செய்யக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.