உலகிலேயே மிகவும் பணக்காரக் கடவுளாகக் கருதப்படும் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலுக்கு நாடுமுழுவதும் இருக்கும் சொத்துக்களின் மதிப்பு குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் உண்மைத் தகவலை வெளியிட்டுள்ளது.
உலகிலேயே மிகவும் பணக்காரக் கடவுளாகக் கருதப்படும் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலுக்கு நாடுமுழுவதும் இருக்கும் சொத்துக்களின் மதிப்பு குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் உண்மைத் தகவலை வெளியிட்டுள்ளது.
அசோக் கெலாட்டின் அரசியல் கேம்! ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை முதல்வராக்க எம்எல்ஏக்கள் போர்க்கொடி
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்ஒய் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ளார் அதில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாடுமுழுவதும் 960க்கும் மேற்பட்ட சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.85,705 கோடியாகும். (இது அரசின் மதிப்புதான். ஆனால் சந்தை மதிப்பு 1.5 மடங்கு அதிகம், ஏறக்குறைய ரூ.2 லட்சம் கோடியைக் கடக்கும்).
கடந்த 5 மாதங்களில் மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் உண்டியல் காணிக்கை மட்டும் ரூ.700 கோடியாகும். திருப்பதி தேவஸ்தானம் நாட்டின் பல்வேறு நகரங்களிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது கிளைகளை தொடங்கி வருவதால், அதன் மூலம் வருமானமும், காணிக்கையும் கொட்டுகிறது.
இந்தியாவின் குரல் உலகளவில் கவனிக்கப்பட பிரதமர் மோடியே காரணம்! மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்ஒய் சுப்பா ரெட்டி கூறுகையில் “ தேவஸ்தானம் சார்பில் 7,123 ஏக்கர் நிலத்தை பராமரித்து வருகிறோம். 1974 மற்றும் 2014ம் ஆண்டுக்குளுக்கு இடையே தேவஸ்தானத்துக்கு பல்வேறு தலைவர்கள் வந்து 114 சொத்துக்களை விற்பனை செய்துள்ளனர். பல்வேறு காரணங்களுக்காக விற்ற இந்த சொத்துக்கள் குறித்தும் காரணங்களையும் கூற முடியாது.
ஆனால், 2014ம் ஆண்டுக்குப்பின் தேவஸ்தானம் எந்த ஒரு சொத்தையும் விற்கவில்லை. எதிர்காலத்தில் தேவஸ்தானத்தின் எந்த சொத்தையும் விற்கும் திட்டமும் இல்லை. ஆந்திர அரசின் வழிகாட்டுதல், உத்தரவின்படி, ஒவ்வொரு ஆண்டும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
முதல் வெள்ளையறிக்கை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. 2வது அறிக்கையும் பதிவேற்றம் செய்யப்பட்டு, சொத்துக்கள் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பக்தர்களே அலர்ட் !! திருப்பதியில் வரவுள்ள மாற்றங்கள்.. என்னென்ன தெரியுமா..? விவரம் உள்ளே
பல்வேறு வங்கிகளில் திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ரூ.14 ஆயிரம் கோடி வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. 14 டன் தங்கம் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வேளாண் நிலங்கள் மட்டும்2,231 ஏக்கர், வேளாண்மைக்கு ஆகாத நிலங்கள் 2.90 லட்சம் சதுரஅடி, திருப்பதியில் வீடுகள் 1.93லட்சம் சதுர அடி, கல்யாணி அணை, சந்திரகிரியில் 1.32 கோடி சதுரஅடி,சித்தூரில் வேளாண்மை இல்லாத நிலங்கள் 1,09 லட்சம் சதுர அடி, புஷ் கரணி சித்தூரில் 78,988 சதுர அடி உள்ளன “ எனத் தெரிவித்தார்