பேர் கிரில்ஸ்- ரஜினி பங்கேற்கும் ’மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சி... ரஜினி காயமடைந்ததாக தகவல்!

Published : Jan 29, 2020, 07:03 AM ISTUpdated : Jan 29, 2020, 07:05 AM IST
பேர் கிரில்ஸ்- ரஜினி பங்கேற்கும் ’மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சி... ரஜினி காயமடைந்ததாக தகவல்!

சுருக்கம்

நடிகர் ரஜினிகாந்த், ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்திருந்தார். இதற்காக நேற்று முன்தினம் கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு சென்றார். 2 நாட்கள் தங்கி ரஜினிகாந்த் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்க இருப்பதாக இருந்தது. 

'மேன் வெர்சஸ் வைல்டு'  நிகழ்ச்சியில் பங்கேற்ற் நடிகர் ரஜினிகாந்த் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


டிஸ்கவரி சேனலில் பேர் கிரில்ஸ் இயக்கும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சி உலகளவில் மிகப் பிரலபம். இந்த நிகழ்ச்சியில் காட்டில் பல சந்தர்ப்பங்களில் பிரபலங்களும் பங்கேற்பதுண்டு. அமெரிக்க அதிபராரக இருந்த பராக் ஒபாமா சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதேபோல பிரதமர் மோடி கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். 
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்திருந்தார். இதற்காக நேற்று முன்தினம் கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு சென்றார். 2 நாட்கள் தங்கி ரஜினிகாந்த் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்க இருப்பதாக இருந்தது. முதல் நாள் நிகழ்ச்சியில் ரஜினி நேற்று பங்கேற்றபோது, அவருக்கு சிறு காயம் ஏற்பட்டதாக தகவல்கள்  தெரிவித்தன.
இந்நிலையில் ஷூட்டிங்கை முடித்துகொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினி, தனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் முள் குத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!