யாரையும் நிம்மதியா வாழவிடமாட்டோம்: மோடியின் வலது கை எடுத்த சபதம்!

By Vishnu PriyaFirst Published Jan 28, 2020, 6:17 PM IST
Highlights

நாங்கள் தேவையில்லாமல் யாரையும் சீண்டுவதில்லை. எங்களை யாராவது சீண்டினால் அவர்களை நிம்மதியாக வாழ விடமாட்டோம். கடந்த 90 களின் பிற்பகுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ஏராளமான பண்டிட்கள் வெளியேறினர். ஆனால் இப்போது மத்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளதால் அவர்கள் காஷ்மீரிலிருக்கும் தங்கள் வீடுகளுக்கு திரும்புகின்றனர். அவர்களி எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.  -ராஜ்நாத் சிங் (மத்திய ராணுவ அமைச்சர்)

* போதை பொருட்களை பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதை பழக்கங்களில் இருந்து அவர்களை மீட்டெடுக்க, விளையாட்டில் அவர்களின் கவனத்தை திருப்ப வேண்டும். -    ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் எம்.பி.)

* எம்.ஜி.ஆர். இளம் வயதில் கடும் வறுமையால் பாதிக்கப்பட்டவர். அதனால்தான், யாரை சந்தித்தாலும் ஏழைகளுக்கு தானம் செய்ய வலியுறுத்துவார். ‘நூறு ரூபாய் சம்பாதித்தால் இருபது ரூபாயை ஏழைகளுக்கு கொடு’ என்பார். ஒருவருக்கு உதவி செய்ய வேண்டுமென நினைத்தால் அதை உடனே செய்வார். -    முத்துலிங்கம் (கவிஞர்)

* வேலூர் லோக்சபா தேர்தல் நடந்தபோது  காஷ்மீர் விவகாரம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனால்தான் வேலூர் தேர்தலில் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியவில்லை. வெறும் எட்டாயிரம் எனும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் நாங்கள் தோற்க, தி.மு.க. வென்றது. -    சி.வி.சண்முகம் (தமிழக சட்ட அமைச்சர்)

* திராவிட கட்சிகளில் ஈ.வெ.ரா தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் சுயநலவாதிகள். ஈ.வெ.ரா தனக்கென எதையும் வைத்துக் கொள்ளவில்லை. அதேபோல் காங்கிரஸுடன் அவர் ஒரு போதும் ஒத்துபோனதே இல்லை. காங்கிரஸின் சில தலைவர்களுடன் நட்பு ரீதியில் மட்டுமே பழகி இருந்தார். -தமிழருவி மணியன் (ரஜினியின் அரசியல் ஆலோசகர்)

* குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறைந்துள்ளன. அந்த சட்டத்தினால் நம் நாட்டில் வசிக்கும் எந்த சிறுபான்மையினருக்கும் எந்த பிரச்னையுமில்லை என்பதை உணர்ந்துள்ளதை அடுத்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த பிரச்னையை முனை மழுங்க விடக்கூடாது என்பதில் தி.மு.க. - காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரமாக உள்ளனர். அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது. 
-ஹெச். ராஜா (பா.ஜ.க. தேசிய செயலர்)

* காவிரி டெல்டாவை பாலவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி தி.மு.க. என்றுமே அணிதிரட்டி நிற்கும். காவிரி பாய்ந்து வளம் சேர்க்க வேண்டிய டெல்டாவையும் காக்கும் வரை ஓயமாட்டோம். 
-மு.க. ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

* சென்னையில் இருந்து வரும்போது ஒரு கிலோ மைசூர்பா, ரெண்டரை கிலோ உருளைகிழங்கு சிப்ஸ் வாங்காமல் வீட்டுக்கு வர வேண்டாம். 
-    தீபிகாபடுகோன் (தன் கணவர் ரன்வீருக்கு சமூக வலைதளத்தில் உத்தரவு)

* நாங்கள் தேவையில்லாமல் யாரையும் சீண்டுவதில்லை. எங்களை யாராவது சீண்டினால் அவர்களை நிம்மதியாக வாழ விடமாட்டோம். கடந்த 90 களின் பிற்பகுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ஏராளமான பண்டிட்கள் வெளியேறினர். ஆனால் இப்போது மத்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளதால் அவர்கள் காஷ்மீரிலிருக்கும் தங்கள் வீடுகளுக்கு திரும்புகின்றனர். அவர்களி எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. -ராஜ்நாத் சிங் (மத்திய ராணுவ அமைச்சர்)

*வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்! என மோடி அரசு உறுதி அளித்தது. ஆனால் யதார்த்தம் என்னவென்றால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 3.64 கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். இதுதான் இந்த அரசின் மிகப்பெரிய சாதனை. எனவேதான் வேலை வாய்ப்பை பற்றி பேசவே மோடி இப்போதெல்லாம் தயங்குறார். -    பிரியங்கா காந்தி (காங்கிரஸ் பொதுச்செயலாளர்)

click me!