5 ஆண்டுகளில் ரூ.220 கோடி மோசடி: ரிசர்வ் வங்கி அதிர்ச்சித் தகவல்..!

By Asianet TamilFirst Published Jan 28, 2020, 5:50 PM IST
Highlights

நகா்ப்புறங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.220 கோடிக்கு மோசடிகள் நடந்துள்ளதாக தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசா்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் நகா்ப்புறங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் ரூ.220 கோடி மதிப்பிலான தொகை மோசடியும், அது தொடர்பாக ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன. 
2018-19-ம் நிதியாண்டில் ரூ.127.7 கோடிக்கு மோசடியும், 181 வழக்குகள் பதிவாகின. 2017-18-ம் நிதியாண்டில் ரூ.46.9 கோடிக்கு மோசடியும் 99 வழக்குகளும், 2016-17 நிதியாண்டில் ரூ.9.3 கோடி மதிப்பிலான மோசடிக்கு 27 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.


அதேபோன்று, 2015-16ம் நிதியாண்டில் ரூ.17.3 கோடி மோசடியும் 187 வழக்குகளும், 2014-15ம் நிதியாண்டில் ரூ.19.8 கோடி மோசடியும் 478 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
ரிசா்வ் வங்கியில் அளிக்கப்பட்ட புகார்களை போலீஸார், சிபிஐ, அமலாக்கப்பிரிவு விசாரிக்க அதை கிரிமினல் புகார்களாக பதிவு செய்ய வேண்டும். பணியாளா்களின் விதிமீறல் இருந்தால் அந்த குற்றத்துக்கு துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு தண்டிக்கப்பட வேண்டும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

click me!