மக்களிடம் வரவேற்பு இல்லை… பிசுபிசுத்துப்போன மும்பை 24x7…. இரவுநேரத்தில் கடைகள் திறந்தும் யாரும் வரவில்லை…!

By Asianet TamilFirst Published Jan 28, 2020, 5:48 PM IST
Highlights

மும்பை நகரும் 26-ம்(நேற்று) தேதியில் இருந்து  அனைத்து கடைகளும், ஷாப்பிங் மால்களும், தியேட்டர்களும் திறந்திருக்கும், 24 மணிநேரமும் இயங்கும் நகரமாக மாறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் நடமாட்டம் கடைகளில் இல்லை.

மும்பை நகரும் 26-ம்(நேற்று) தேதியில் இருந்து  அனைத்து கடைகளும், ஷாப்பிங் மால்களும், தியேட்டர்களும் திறந்திருக்கும், 24 மணிநேரமும் இயங்கும் நகரமாக மாறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் நடமாட்டம் கடைகளில் இல்லை. இதனால் கடைகள், ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் வெறிச்சோடிக்காணப்பட்டன. போதுமான அளவுக்கு மக்களிடம் விழிப்புணர்வு இல்லாதது, மக்களுக்கு அறிவுறுத்தாதது போன்றவற்றால் இந்த நிலை இருக்கிறது என ஹோட்டல், கடைகள் உரிமையாளர்கள் தெரிவித்தனர். 


மும்பை நகரம் 24 மணிநேரமும் செயல்பட அனுமதிக்கும் முடிவுக்கு மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை கடந்த 22-ம் தேதி ஒப்புதல் அளித்ததது. 26-ம் தேதி நள்ளிரவு முதல் மும்பை நகரம் 24 மணிநேரமும் இயங்குவது பிரசோதனை முயற்சியாக அனுமதி அளிக்கபப்ட்டது. இந்த உத்தரவால் கூடுதலாக 5 லட்சம் மக்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.பாந்த்ரா குர்லா காம்ப்ளஸ், நாரிமன் பாயின்ட் ஆகிவற்றில் உணவகங்கள் தொடர்ந்து திறந்திருக்க அனுமதிக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று இரவு பல கடைகள், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் திறந்திருந்தும் மக்களின் வருகை மிகக்குறைவாகவே இருந்தது. காண்டிவாலி பகுதியில் உள்ள ஹோட்டலின் மேலாளர் கூறுகையில், “ எதி்ரபார்த்த அளவுக்கு நேற்று இரவு மக்கள் கூட்டம் வரவில்லை. ஆனால், வார விடுமுறை நாட்களில் நிச்சயம் மக்கள் வருகை இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த திட்டம் குறித்து அரசு சார்பில் எந்த விளம்பரம், விழிப்புணர்வு பிரச்சாரம் இல்லை என்பதே மக்கள் அறிந்து கொள்ள முடியாமல் போனதற்கு காரணமாகும். பலருக்கு இரவு நேரம் முழுவதும் கடைகள் திறந்திருக்குமா என்பது தெரியவில்லை.

அரசு முறைப்படி மக்களுக்கு தெரிவித்தால் நல்லவரவேற்பு இருக்கும்” எனத் தெரிவித்தார் .மகாராஷ்டிரா சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே கூறுகையில், “ வரும் வாரங்களில் மும்பை 24 மணிநேரம் இயங்கும் திட்டத்துக்கு மக்களிடம் வரவேற்பு இருக்கும். மக்கள் இரவுநேரங்களிலும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணர்ந்துவிட்டால் நிச்சயம் வெளியேவந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். முதல்நாளான நேற்று ெபரிய அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கும் என எதிர்பார்த்தேன் அது இல்லை” எனத் தெரிவித்தார்

click me!