பிளான் பண்ணிடுங்க…3 நாள் பேங்க் லீவு…..ஜனவரி 31, பிப். 1 தேதிகளில் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்..!

By Asianet TamilFirst Published Jan 28, 2020, 5:54 PM IST
Highlights

வரும் 31-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதிகளில் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்திய வங்கிகள் கூட்டமைப்புகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. இதில் நாடுமுழுவதிலும் இருந்து 10 லட்சம் ஊழியர்கள்,அதிகாரிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தப் போராட்டம் காரணமாக, பணம், செக், டிடி பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.  மேலும், பிப்ரவரி 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிக்கு வழக்கமான விடுமுறை நாள் என்பதால், வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வங்கிகள் செயல்படாது. இதனால் மக்கள் தங்கள் வங்கி தொடர்பான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளலாம். 


அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “  வங்கிகள் வாரத்துக்கு 5 நாள்கள் செயல்பட வேண்டும்; 20 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகும் கோரிக்கைகளுக்கு தீா்வு காணப்படவில்லை எனில், வரும் மாா்ச் 11, 12 மற்றும் 13 ஆகிய 3 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தப்படும்.


மத்திய தலைமை தொழிலாளா்கள் ஆணையா், இந்திய வங்கிகள் கூட்டமைப்பு உறுப்பினா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் எங்கள் கோரிக்கை தொடா்பாக எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே, திட்டமிட்டப்படி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார். இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் அகில இந்திய அளவில் 10 லட்சம் ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

click me!