முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தொழில்நுட்ப நிபுணருமான ராஜீவ் சந்திரசேகர், பாஜகவின் கேரள மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்ட இவர், கேரளாவில் கட்சிக்கு புதிய உத்வேகம் அளிப்பார்.
முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தொழில்நுட்ப நிபுணருமான ஆர். சி. ராஜீவ் சந்திரசேகர், பாஜகவின் கேரள மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்ட இவர், கேரளாவில் கட்சிக்கு புதிய உத்வேகம் அளிப்பார்.
தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துவதில் பெயர் பெற்றவர், வளர்ச்சியை மையமாகக் கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றுபவர் என்பதால் ராஜீவ் சந்திரசேகரை பாஜக மத்தியத் தலைமை தேர்ந்தெடுத்துள்ளது. வழக்கமான அரசியல்வாதியைப் போல் இல்லாமல், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விரிவாக பதில் அளிப்பது ராஜீவ் சந்திரசேகரின் பாணி. பிரதமர் மோடியின் செல்வாக்கை பிரதிபலிக்கும் வகையில் கேரள மாநிலத் தலைவரைத் தேடிய தேசியத் தலைமை இவரைத் தேர்வு செய்துள்ளது.
நிஜ வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!
ராஜீவ் சந்திரசேகர் மின் பொறியியலில் என்ஜினியரிங் பட்டம் பெற்றவர். பிறகு கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலைப் பட்டம் பெற்றார். மத்திய தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு இணை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர்.
விமானப்படை அதிகாரி எம்.கே. சந்திரசேகர் மற்றும் வள்ளி சந்திரசேகர் ஆகியோருக்கு 1964ஆம் ஆண்டு அகமதாபாத்தில் பிறந்தார். ராஜீவ், ஆரம்பத்தில் பெங்களூருவில் தொழில்முனைவோராக முத்திரை பதித்தார். தொழில் கர்நாடகாவில் இருந்தாலும், அவரது குடும்பம் கேரளாவின் பாலக்காட்டில் உள்ள கொண்டியூரைச் சேர்ந்தது.
வயர்லெஸ் தொலைபேசி வெறும் கனவாக இருந்த காலத்தில், ராஜீவ் சந்திரசேகர் 1994 இல் பேஜர்களையும் பின்னர் பிபிஎல் (BBL) மூலம் மொபைல் சேவைகளையும் தொடங்கினார். இந்தியாவின் தொழில்நுட்ப புரட்சியில் முக்கிய நபராக மாறினார். 2005ஆம் ஆண்டில், அவர் ஜூபிடர் கேபிட்டல் நிறுவனத்தைத் தொடங்கி, தனது வணிக முயற்சிகளை மேலும் விரிவுபடுத்தினார்.
செமிகண்டக்டர், ஏஐ, குவாண்டம் கம்ப்யூட்டிங்: இந்திய அரசுடன் ஐபிஎம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் ஜல் சக்தி ஆகிய துறைகளின் இணை அமைச்சராக இருந்த ராஜீவ் சந்திரசேகர், இந்திய செமிகண்டக்டர் வடிவமைப்பில் புரட்சியை ஏற்படுத்தினார். 2024ஆம் ஆண்டில் செமிகண்டக்டர் வடிவமைப்புக்கான ChipIN மையத்தை அறிமுகப்படுத்தினார். இது இந்தியாவில் வடிவமைப்பை மாற்றும் முன்னோடி முயற்சியாகும்.
120 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களை ஈடுபடுத்தும் ChipIN, அதிநவீன மின்னணு வடிவமைப்பு ஆட்டோமேஷன் (EDA) கருவிகளை பயன்படுத்தும், அடுத்த தலைமுறை பொறியாளர்களை உருவாக்கவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற மோடி அரசின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, செமிகான் இந்தியா 2024 என்ற மாநாடு செப்டம்பர் 11 முதல் 13 வரை நடைபெற்றது.
2024 மே மாதம் புது தில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய ராஜீவ் சந்திரசேகர், "இன்று இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் வழக்கமான மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 2.8 மடங்கு வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இது 2014 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதமாக இருந்தது. இன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2026-27ஆம் ஆண்டில் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும்" என்று கூறினார்.
மேலும், "நாம் ஏற்கனவே உலகில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கிறோம். மேலும் 2027-28 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை எட்டும் இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
செமிகண்டக்டர் துறையில் விரைவான முன்னேற்றம்: ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்!
ஒரு பிரபல தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ராஜீவ் சந்திரசேகர் 2006ஆம் ஆண்டு கர்நாடகாவிலிருந்து பாஜக எம்.பி.யாக மாநிலங்களவையில் நுழைந்தார். தொடர்ந்து மூன்று முறை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021ஆம் ஆண்டு, மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். கேரள தேசிய ஜனநாயக கூட்டணியின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை எதிர்த்துப் போட்டியிட்டார். சசி தரூருக்கு கடும் போட்டியாக இருந்த ராஜீவ் சந்திரசேகர், வாக்கு எண்ணிக்கை முடிவில் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
ராஜீவ் சந்திரசேகர் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பின்னணி இல்லாத முதல் பாஜக மாநிலத் தலைவராக இருப்பார். நீண்டகாலமாகவே கேரள பாஜகவினர் இடையே உட்கட்சி பூசல் நிலவுகிறது. ராஜீவ் தலைமைப் பொறுப்புக்கு வந்ததும் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து கட்சியை மீண்டும் பலப்படுத்துவார்.
சுனிதா வில்லியம்ஸுக்கு இவ்ளோ சம்பளமா! கேட்டவுடன் ஷாக் ஆன டிரம்ப்!