நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து… ராஜஸ்தான் டெய்லர் கொடூரமாக வெட்டி படுகொலை!!

By Narendran SFirst Published Jun 28, 2022, 8:26 PM IST
Highlights

பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதற்காக ராஜஸ்தானை சேர்ந்த டெய்லர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 

பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதற்காக ராஜஸ்தானை சேர்ந்த டெய்லர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். உதய்பூரில் உள்ள கண்னையா லால் என்பவரின் கடைக்கு கத்தி மற்றும் வாளுடன் சென்ற சிலர் பட்டப்பகலில் கடைக்காரரை கொடூரமாக கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் துணிகளுக்கு அளவீடு செய்வதாக கூறி தையல் கடைக்கு வந்து கடைக்காரரை கொடூரமாக கொன்றதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் கண்ணையாலால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட கொலைகாரர்கள் தையல்காரரின் தலையை ஆயுதத்தால் கொடூரமாக வெட்டியது மட்டுமல்லாமல், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் டெய்லர் கொடூரமாக கொலை… காரணம் இதுதான்… மாநிலத்தில் உச்சக்கட்ட பதற்றம்!!

இந்த சம்பவத்தால் உதய்பூர் முழுவதும் பரபரபான சூழல் காணப்படுகிறது. கொலையாளிகள் பிரதமர் மோடியின் உயிரையும் பறிப்போம் என்றும் அச்சுறுத்தினர். இந்த கொலையை கண்டித்து அப்பகுதி மக்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். பதற்றமான சூழல் நிலவியதால் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இணையதள சேவை முடக்கப்பட்டது.

இதையும் படிங்க: ராஜஸ்தான் டெய்லர் கொலை செய்யப்பட்ட விவகாரம்… ஐந்து மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது!!

மேலும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க ஜெய்ப்பூரில் இருந்து இரண்டு ஏடிஜிபிகள், மேலும் ஒரு எஸ்பி மற்றும் 600 கூடுதல் போலீசார் உதய்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தரப்பினரும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தச் சம்பவத்தின் வீடியோவைப் பகிர்வதன் மூலம் சூழலைக் கெடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!