ராமர் கோயில் கட்டுமானப் பணிகளில் ராஜஸ்தானில் இருந்து செதுக்கப்பட்ட இளஞ்சிவப்பு கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ராஜஸ்தானின் பன்சி பஹர்பூரில் வெட்டப்பட்ட இளஞ்சிவப்பு கல் ராமர் கோவில் சுவர்களுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது. இதனை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் 15 அறங்காவலர்களில் ஒருவரான அனில் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
undefined
இளஞ்சிவப்பு கல் அடுக்குகள் தாமிர பட்டைகள் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்படும். எனவே இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வழங்கிய 35 ஆயிரம் செப்பு கீற்றுகளும் ராம ஜென்மபூமி வளாகத்தை ஏற்கனவே அடைந்துள்ளது. சுமார் 70 ஆயிரம் செப்புத் தகடுகள் கோயில் கட்டுமானத்தில் கற்களை ஒன்றோடொன்று இணைக்கப் பயன்படுத்தப்படும்.
ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் ராமர் கோவில் திறந்து வைக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி முன்னின்று நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரமாண்டமாக வளரும் அயோத்தி ராமர் கோவில்.. கட்டுமானத்திற்கு பின்னால் என்ன நடக்கிறது தெரியுமா?