அயோத்தியில் ராமர் கோவில்.. அடிக்கல் நாட்டும் பிரதமர் - பல நூற்றாண்டுகளாக ராம ஜென்மபூமி கடந்து வந்த பாதை!

By Ansgar R  |  First Published Sep 13, 2023, 7:00 AM IST

அயோத்தியில், பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில், ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை அதாவது அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.


ஆனால் இந்த ராம ஜென்மபூமி இயக்கம் குறித்து பல நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்று பார்த்தால், அதில் உள்ள அரசியல், சர்ச்சை, சட்டச் சிக்கல்கள் மற்றும் வன்முறையில் சிக்கித் தவித்தது, உள்ளிட்டவற்றை காணலாம். சரி கடந்த சில நூற்றாண்டுகளில் இந்த ராம ஜென்மபூமி கடந்து வந்த பாதை என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

1528ம் ஆண்டு 

Latest Videos

undefined

சுமார் 495 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த ஆண்டு தான், முகலாயப் பேரரசர் பாபரின் தளபதி மீர் பாக்கி அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்டினார்.

1949ம் ஆண்டு 

இந்த ஆண்டு தான் ஒரு கும்பல், பாபர் மசூதியை சுற்றி முற்றுகையிட்டு, அங்கு குழந்தை ராமர் மற்றும் ராமரின் சிலைகளை, மசூதியின் கீழ் வைக்கிறது.

ஜனவரியில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு: பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

1986ம் ஆண்டு 

உள்ளூர் நீதிமன்றம் ஒன்று, இந்து மதத்தை சேர்ந்த வழிபாட்டாளர்களுக்கு, அந்த தளத்தை திறந்துவிட இந்திய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டபோது ராஜீவ் காந்தி தான் இந்தியாவின் பிரதமராக இருந்தார்.

1989ம் ஆண்டு 

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான தியோகி நந்தன் அகர்வாலா, அயோத்தியில் உள்ள கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டுள்ள ‘ராம் லல்லா விரஜ்மன்’ என்ற தலைப்பில் வழக்குத் தாக்கல் செய்ததை அடுத்து, பாஜக அதிகாரப்பூர்வமாக இந்த இயக்கத்தில் இணைந்தது.

1990ம் ஆண்டு 

ஜென்மபூமி இயக்கத்திற்கு ஆதரவாக பாஜக தலைவர் எல்.கே. அத்வானி, குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை ரத யாத்திரையை தொடங்கினார்.

6 டிசம்பர் 1992ம் ஆண்டு 

கரசேவகர்கள் என்று அழைக்கப்படுபவர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

1994ம் ஆண்டு 

வரலாற்று சிறப்பு மிக்க இஸ்மாயில் ஃபரூக்கியின் தீர்ப்பில், பாபர் மசூதி இஸ்லாத்துடன் ஒருங்கிணைந்ததாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

2010ம் ஆண்டு 

2:1 என்ற பெரும்பான்மை தீர்ப்பில், அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

2011ம் ஆண்டு 

அயோத்தி நிலம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

9 நவம்பர் 2019

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு - அரசு ஒரு தனி குழுவை அமைத்து சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் கோவிலுக்கும், முஸ்லிம்களுக்கு மற்றொரு இடத்தைப் பெற வேண்டும் என்று அறிவித்தது.

பிரமாண்டமாக வளரும் அயோத்தி ராமர் கோவில்.. கட்டுமானத்திற்கு பின்னால் என்ன நடக்கிறது தெரியுமா?

click me!