இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கை சஸ்பெண்ட் செய்து பாஜக மாநிலத்தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கை சஸ்பெண்ட் செய்து பாஜக மாநிலத்தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
கோஷ்மஹால் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த டி ராஜா சிங். இவர் ஏற்கெனவே பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறகப் பேசி வீடியோ ஒன்றை ராஜா சிங் வெளியிட்டார்.
நபிகள் நாயகம் குறித்து அவதூறு: தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங் கைது
இந்த வீடியோவுக்கு எதிராகவும், ராஜாசிங்கை கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று ஹைதராபாத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து, ஹைதராபாத் தெற்கு மண்டலத்தில் உள்ள தபீர்புரா போலீஸ்நிலையத்தில் டி ராஜா சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர் மீது ஐபிசி பிரிவு153ஏ, 295, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறைத்தூதர் மீது வேண்டுமென்றே அவதூறு பேசி, கருத்துக்களை வெளியிட்டமைக்காக ராஜா சிங்கை சஸ்பெண்ட் செய்து பாஜக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
இப்படியெல்லாம் பேசக்கூடாது! பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் ‘குட்டு’ : நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
இதுகுறித்து பாஜக தலைமை அலுவலகத்தின் மத்திய ஒழுங்குக் குழு ஓம் பதக் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பல்வேறு விவகாரங்களில் கட்சியின் கொள்கைக்கு மாறாக நீங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளீர்கள்.இது பாஜகவின் அரசியலமைப்புச் சட்டம் 25(10)ஏ பிரிவுக்கு எதிரானதாகும்.
உங்கள் மீதான விசாரணை நிலுவையில் இருப்பதால், தற்காலிகமாக நீங்கள் கட்சியியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறீர்கள் உங்களுக்கு வழங்கப்பட்ட கட்சி சார்ந்த பொறுப்புகள், பதவிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.
பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுதலைக்கு எதிரான மனு: பரிசீலனைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்பு
இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 10 நாட்களுக்குள், ஏன் உங்களை கட்சியிலிருந்து நீக்கக் கூடாது என்பதற்கு விரிவான விளக்கத்தை வரும் செப்டம்பர் 2ம் தேதிக்குள் கட்சித் தலைமைக்கு வழங்கிட வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.