புத்தம் புதிய வடிவில் டிஸ்கவரி ஸ்கூல் சூப்பர் லீக் 5வது சீசனுக்கான ஆடிஷன்..! டிஸ்கவரி இந்தியா அதிரடி அறிவிப்பு

Published : Aug 23, 2022, 03:20 PM ISTUpdated : Aug 25, 2022, 11:29 AM IST
புத்தம் புதிய வடிவில் டிஸ்கவரி ஸ்கூல் சூப்பர் லீக் 5வது சீசனுக்கான ஆடிஷன்..! டிஸ்கவரி இந்தியா அதிரடி அறிவிப்பு

சுருக்கம்

இந்தியாவின் முன்னணி இன்ஃபோடெயின்மென்ட் சேனலான டிஸ்கவரி சேனல், இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வினாடி வினா நிகழ்ச்சிகளில் ஒன்றான டிஸ்கவரி ஸ்கூல் சூப்பர் லீக்கிற்கான 5வது சீசன் தொடக்கத்தினை இன்று அறிவித்துள்ளது.  

இந்தியாவின் முன்னணி இன்ஃபோடெயின்மென்ட் சேனலான டிஸ்கவரி சேனல், இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வினாடி வினா நிகழ்ச்சிகளில் ஒன்றான டிஸ்கவரி ஸ்கூல் சூப்பர் லீக்கிற்கான 5வது சீசன் தொடக்கத்தினை இன்று அறிவித்துள்ளது.

தேசிய அளவிலான பள்ளி வினாடி வினா போட்டியின் புதிய சீசனிற்கான அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ‘புரிந்துகொள்ள பயில்வோம், புரிந்துகொண்டதன் மூலம் வெல்வோம்’ என்ற கொள்கையுடன், 2000+ நகரங்களில் 1 கோடி மாணவர்களை புதிய கலப்பின வடிவத்தில் பங்கேற்க செய்வதை இலக்கு வைத்துள்ளது.

சீசன் 4 இல் டிஸ்கவரி ஸ்கூல் சூப்பர் லீக்கின் அற்புதமான வெற்றியை தொடர்ந்து, டிஸ்கவரி சேனல், இந்தியாவின் மிகப்பெரிய எட்-டெக் நிறுவனமான BYJU’S உடன் இணைந்து வினாடி வினாவை நடத்துகிறது. விமர்சன சிந்தனை, திறன் மற்றும் பொது அறிவு வினாடி வினா, தேசிய அளவில் போட்டியிடுவதற்கும், தங்களுக்கும் தங்கள் பள்ளிக்கும் பாராட்டுக்களைப் பெறுவதற்கும் ஒரு தனித்துவமான தளத்தை மாணவர்களுக்கு வழங்கும். இது மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டியை வளர்ப்பதையும், அவர்களுக்கு ஈடுபாட்டுடன் அறிவு பகிர்வை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

டிஸ்கவரி ஸ்கூல் சூப்பர் லீக் மக்களிடையே எதிர்பாராத அளவிற்கு வரவேற்பினை பெற்றுள்ளது மகிழ்ச்சியினை அளிக்கிறது. மாணவர்களும் பள்ளிகளும் ஆண்டு முழுவதும் DSSLபுதிய சீசன் தொடக்கத்தினை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள், இது ஒரு சாதனையாகும், இவையனைத்தும் ஒவ்வொரு சீசனினையும் புத்தம் புதிய புதுமைகளுடன் கொண்டு வர எங்களை ஊக்குவிக்கிறது. புதுமையான மற்றும் ஈர்க்கக்கூடிய வடிவங்கள் மூலம் வழங்கினால் கற்றலும் பொழுதுபோக்கும் கைகோர்த்துச் செல்லும் என்று டிஸ்கவரியில் நாங்கள் நம்புகிறோம் என தனாஸ் மேத்தா, வார்னர் பிரதர்ஸ், தெற்காசியாவின் விளம்பர விற்பனைத் தலைவர் அவர்கள் கூறியுள்ளார். 

டிஸ்கவரி போட்டிக்கான அடிப்படை பணிகள் தொடங்கிவிட்டதால், ​​மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் இலவசமாக ஆரம்ப சுற்றில் பங்கேற்கலாம். வெற்றி அல்லது தோல்வி என்ற பாகுபாடின்றி அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் இலவச BYJU’S கோர்ஸ்கள் மற்றும் BYJU’S டியூஷன் சென்டர் (BTC) வகுப்புகள் போன்ற பரிசுகளைப் பெறுவார்கள். கூடுதலாக, ஒவ்வொரு கிரேடு டாப்பருக்கும் ஸ்கூல் பேக் பரிசாக கிடைக்கும் மற்றும் BTC இல் நேருக்கு நேர் திறனாய்வுத் தேர்வின் விரிவான பகுப்பாய்வைப் பெறுவார்கள். பல்வேறு வினாடி வினாப் போட்டிகளுக்குப் பிறகு, மாநிலச் சுற்றுக்கான தகுதிப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், இப்போட்டி அவர்களுக்கு அருகிலுள்ள BTC இல் நடைபெறும்.

முதல் மூன்று அணிகள் மற்றும் அவர்களின் பள்ளி முதல்வர்கள் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் நாசாவிற்கு பயணம் செய்யக் கூடிய அரிய வாய்ப்பு கிடைக்கும். இவற்றுடன், முதல் மூன்று இடங்களை பெறும் அணிகளுக்கு எதிர்பாராத பண பரிசு மற்றும் டிஸ்கவரி நெட்வொர்க்கில் தோன்ற கூடிய தேசிய அளவிலான அங்கீகாரமும் கிடைக்கும். 

கற்றல் மற்றும் பொழுதுபோக்கிறான ஒரே இடமாக இருக்கும், டிஸ்கவரி இந்தியா மாணவர்களின் அறிவாற்றலினை கல்வி காணொளிகள், வினாடி வினா மற்றும் சுற்றுலா மூலம் விரிவுப்படுத்துவதோடு அதனை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ்கள், கல்வி உதவித்தொகைகள் மற்றும் விருதுகளை வழங்கி ஊக்குவிக்கிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே ஆரோக்கியமான போட்டி மற்றும் கற்றல் உணர்வை வளர்த்து, இளம் கன்றுகளின் பயமறியா ஆற்றலை சீர்படுத்தி மேம்படுத்துவதன் மூலம் டிஸ்கவரி ஸ்கூல் சூப்பர் லீக் கல்வியில் புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தி வருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!