முஸ்லிம்களுக்கு செக்.. மசூதிகளில் உள்ள ஸ்பீக்கர்களை அகற்ற நாளை வரை தான் கெடு.. ராஜ் தாக்கரே எச்சரிக்கை.!

Published : May 02, 2022, 09:12 AM IST
முஸ்லிம்களுக்கு செக்.. மசூதிகளில் உள்ள ஸ்பீக்கர்களை அகற்ற நாளை வரை தான் கெடு.. ராஜ் தாக்கரே எச்சரிக்கை.!

சுருக்கம்

எல்லா ஒலிபெருக்கிகளும் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்கான மே 3ம் தேதி காலக்கெடுவிற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதற்கு நான் பொறுப்பேற்க மாட்டேன். 

மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை மே 3ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கெடு விதித்துள்ளார்.

மசூதி

கடந்த 2-ம் தேதி நடந்த  பொதுக்கூட்டத்தில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பேசும்போது;- மசூதிகளில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை அகற்றவில்லையெனில், அதன் அருகே நவநிர்மாண் சேனாவினர் ஒலிப்பெருக்கியில் அனுமன் பாடல்களை ஒலிப்பார்கள் என்றும் அறிவித்திருந்தார். இதனையடுத்து, 72 சதவீத மசூதிகளில் காலை தொழுகை அல்லது பிரார்த்தனைக்கு ஒலிபெருக்கி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. 

ஒலி பெருக்கி

இந்நிலையில், மகாராஷ்டிரா தின கொண்டாட்டத்தையொட்டி அவுரங்காபாத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே உரையாற்றினார். அப்போது:- மசூதிகளில் தொந்தரவாக இருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்றுவதற்கான மே 3 காலக்கெடுவில் நான் உறுதியாக இருக்கிறேன். இது மதப் பிரச்சினை அல்ல, இது ஒரு தேசிய பிரச்சினை. 

எச்சரிக்கை

எல்லா ஒலிபெருக்கிகளும் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்கான மே 3ம் தேதி காலக்கெடுவிற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதற்கு நான் பொறுப்பேற்க மாட்டேன். ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் கேட்கவில்லை என்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் கூறினார்.

ஹனுமான் சாலிசா பாடல்கள்

உத்தரபிரதேச அரசால் ஒலிபெருக்கிகளை அகற்ற முடிகிற போது, உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசு அவ்வாறு செய்வதைத் தடுப்பது எது?  என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மே 4 முதல் அனைத்து இந்துக்களும் ஹனுமான் சாலிசா பாடல்களை, மசூதி ஒலிப்பெருக்கிகளின் அளவை விட இரட்டிப்பாக ஒலிக்கச் செய்ய வேண்டும் என ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Forbidden Indian Places: இந்தியர்களுக்கே அனுமதி இல்லை.. வெளிநாட்டவர்களுக்கு மட்டும் திறந்திருக்கும் இந்தியாவின் 5 இடங்கள்
Petrol Bikes : ஏப்ரல் 2028 முதல் பெட்ரோல் பைக்குகளுக்கு தடையா? அரசு எடுத்த அதிரடி முடிவு! எங்க தெரியுமா?