ஷாக்கிங் நியூஸ்.. ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி உயிரிழப்பு.. 14 பேர் மருத்துவமனையில் அனுமதி.!

Published : May 02, 2022, 08:23 AM ISTUpdated : May 02, 2022, 09:38 AM IST
ஷாக்கிங் நியூஸ்.. ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி உயிரிழப்பு.. 14 பேர் மருத்துவமனையில் அனுமதி.!

சுருக்கம்

கேரள மாநிலம் காசர்கோடு அருகே செருவத்தூரில் உள்ள உணவகத்தில் கடந்த வெள்ளிகிழமை சிறுமி கெட்டுப்போன அசைவ உணவான ஷவர்மாவை சாப்பிட்டுள்ளார். அதேபோல், சக மாணவர்களும் அதை வாங்கி சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது.

கேரளாவின் காசர்கோடு அருகே செருவத்தூரில் உள்ள உணவகத்தில் ‘ஷவர்மா’ வாங்கி சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு அருகே செருவத்தூரில் உள்ள உணவகத்தில் கடந்த வெள்ளிகிழமை சிறுமி கெட்டுப்போன அசைவ உணவான ஷவர்மாவை சாப்பிட்டுள்ளார். அதேபோல், சக மாணவர்களும் அதை வாங்கி சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தேவானந்தா (16) என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 14 மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உணவு பாதுகாப்பு ஆணையருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டார்.  மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தியதில், உணவகத்தில் உள்ள ஷவர்மா சாப்பிட்டதால் தான் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!