புதிய வந்தே பாரத் ரயில்கள்: எந்தெந்த ரூட்டில் விட போறாங்க? தமிழ்நாடு லிஸ்ட்ல இருக்கா?

By Manikanda Prabu  |  First Published Sep 13, 2023, 3:00 PM IST

புதிய ரயில் வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது


வந்தே பாரத் ரயில் என்பது மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

டெல்லி முதல் வாரணாசி வரை மற்றும் டெல்லி முதல் கத்ரா வரை என 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Latest Videos

undefined

அதன் தொடர்ச்சியாக, புதிய ரயில் வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 9 புதிய வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தப்படவில்லை.

பொது சிவில் சட்டத்துக்கு எதிராக நாகாலாந்து தீர்மானம்: பாஜக அதிர்ச்சி!

மொத்தம் 9 புதிய ரயில்களில், இந்தூர் - ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் - உதய்பூர், பூரி - ரூர்கேலா, பாட்னா - ஹௌரா, ஜெய்ப்பூர் - சண்டிகர் ஆகிய 5 வழித்தடங்கள் உத்தேசமாக இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 3 வழித்தடங்கள் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பாதைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன. அதேபோல், 4ஆவது ரயிலின் விவரங்கள் தெரியவில்லை.

தெற்கு ரயில்வேக்கு 3 வழித்தடங்கள் வழங்கப்பட்டால், சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, பெங்களூரு - கோவை ஆகிய மூன்று வழித்தடங்கள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது சென்னை சென்ட்ரல் - மைசூரு, சென்னை சென்ட்ரல் - கோவை என இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டில் உள்ளன.

click me!