அமலாக்கத்துறை இயக்குனரகத்திற்கு புதிய இயக்குநரை நியமிக்கும் வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, ராகுல் நவீன் பொறுப்பு இயக்குனராக இருப்பார்.
இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரி ராகுல் நவீன், அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் ராகுல் நவீன் இடைக்கால இயக்குநராகப் பதவியேற்க உள்ளார்.
அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் இயக்குநராக இருந்த ஸ்ரீ சஞ்சய் குமார் மிஸ்ரா 15.09.2023 அன்று பதவிக்காலத்தை நிறுவு செய்தார் எனவும் ஐஆர்எஸ் அதிகாரி ராகுல் நவீன் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்படுவதாகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
undefined
புதிய இயக்குநரை நியமிக்கும் வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, இவர் அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் பொறுப்பு இயக்குனராக இருப்பார் என்றும் அதிகாரப்பூர்வ உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் அரசியல் சாசன முகவுரையை வாசிப்பது கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு
ராகுல் நவீன் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றுவதோடு, அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் தலைமை அலுவலகத்தில் தலைமை கண்காணிப்பு அதிகாரியாகவும் பணியாற்றுவார்.
இதற்கு முன் இயக்குநராக இருந்த எஸ்.கே.மிஸ்ரா செப்டம்பர் 15 வரை மட்டும்தான் பதவியில் தொடரலாம் என்றும் கடந்த ஜூலை 27 அன்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. முன்னதாக, மூன்றாவது முறையாக மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது.
நான்கு ஆண்டுகளுக்கு மேல் அமலாக்கத்துறை இயக்குநராக இருந்த மிஸ்ரா, உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பு காரணமாக அந்தப் பதவியை இழந்துள்ளார். ஆனால், மத்திய அரசு சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து புலனாய்வு அமைப்புகளுக்கும் பொதுவான தலைவர் பதவி ஒன்றை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு புதிய பதவி உருவாக்கப்பட்டால், அது எஸ்.கே.மிஸ்ராவுக்கே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
உக்கடம் கார் வெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை