காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அரசியல்ரீதியாகப் பயனற்றவராக இருக்கலாம், அதற்காக நாடாளுமன்றத்தின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை முடக்கக்கூடாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி காட்டமாகத் தெரிவித்தார்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அரசியல்ரீதியாகப் பயனற்றவராக இருக்கலாம், அதற்காக நாடாளுமன்றத்தின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை முடக்கக்கூடாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி காட்டமாகத் தெரிவித்தார்
மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. 2-வதுநாளான நேற்று எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஜிஎஸ்டி வரி, சமையல்கேஸ் விலை உயர்வு ஆகிய பிரச்சினைகளை தீர்க்கக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பினர்.
மனஅழுத்தமின்றி விளையாடுங்கள்: காமென்வெல்த் விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
இதனால் ஏற்பட்ட அமளியால், இரு அவைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன. மிகக் குறைந்த அளவு நேரம்தான் நாடாளுமன்றம் நடந்தது.
தொடர்ந்து 3-வது நாளாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு, சமையல் கேஸ் விலை உயர்வு ஆகிய பிரச்சினைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி வரி குறைப்பு: கையைச் சுட்டுக்கொண்ட மத்திய அரசு: அம்பானிக்கு நிம்மதி
பிரச்சினைகளைக் குறித்து நாடாளுமன்றத்தில் பேசாமல், விவாதத்தில் பங்கேற்காமல் பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்குகிறார்கள், எந்தபிரச்சினை குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இருதரப்பும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டுகிறார்கள்
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தபோது, ராகுல் காந்தியை கடுமையாகச் சாடினார். அப்போது அவர் கூறுகையில் “ ராகுல் காந்தியி்ன் அரசியல் வாழ்க்கை என்பது, நாடாளுமன்ற நடைமுறைகளுக்கும், பாரிம்பரியத்துக்கும் மதிப்பளிக்காமல் இருக்கும் கரும்புள்ளிகளைக் காட்டுகிறது. இப்போது மக்களவையின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை குறைக்கும் வகையில் ராகுல் காந்தி பிடிவாதமாக செயல்படுகிறார்.
சிவசேனா கதை முடிகிறதா? 12 எம்.பி.க்கள் ஷிண்டே பக்கம்: புதிய அவைத் தலைவர் தேர்வு
2014 முதல் 2019ம் ஆண்டுவரை ராகுல் காந்தி அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்தபோது நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விகூட கேட்டதில்லை. அவரின் தொகுதியேயே கைவிட்டவர் ராகுல் காந்தி.
2019ம் ஆண்டு வயநாடு தொகுதி எம்.பியாகியபின், நாடாளுமன்றத்துக்கு 2019ம் ஆண்டு குளிர்காலக் கூட்டத் தொடரில் 40 சதவீதம் மட்டுமே ராகுல் காந்தி வருகை புரிந்துள்ளார். இதுவரை எந்தவிதமான தனிநபர் மசோதாவையும் ராகுல் காந்தி கொண்டுவரவில்லை.
ராகுல் காந்தி சார்ந்திருக்கும் கட்சி ஆழ்ந்த கவலை தரும் வகையில் இருப்பதால்தான், அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்கிறார். ராகுலின் அரசியல் வாழ்க்கை,நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு மதிப்பளிக்காமல்தான் இருக்கிறது. இப்போது, நாடாளுமன்ற விவாதங்களும் நடக்கவிடாமல் தடுக்க முயற்சிக்கக் கூடாது.
அரசியல்ரீதியாக ராகுல் காந்தி பிரயோஜனமில்லாதவராக இருக்கலாம், அதற்காக நாடாளுமன்றத்தின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை முடக்க முயலக்கூடாது
இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்தார்