சிவசேனா கட்சியிலிருந்த எம்எல்ஏக்கள்தான் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சென்றார்கள் என்றால், எம்.பி.க்களும் ஷிண்டே பக்கம் சென்றுவிட்டார்கள். மாநிலத்திலும்ஆட்சியை இழந்த சிவேசனா கட்சி, நாடாளுமன்றத்திலும் அதிகாரத்தை இழந்துவிட்டது.
சிவசேனா கட்சியிலிருந்த எம்எல்ஏக்கள்தான் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சென்றார்கள் என்றால், எம்.பி.க்களும் ஷிண்டே பக்கம் சென்றுவிட்டார்கள். மாநிலத்திலும்ஆட்சியை இழந்த சிவேசனா கட்சி, நாடாளுமன்றத்திலும் அதிகாரத்தை இழந்துவிட்டது.
மக்களவையில் சிவசேனா கட்சிக்கு 19 எம்பிக்கள் உள்ளனர். இதில் 12 எம்.பி.க்கள் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள். இந்த 12 எம்.பி.க்களும் நாடாளுமன்றக் குழுத் தலைவராக, ராகுல் ஷிவாலே-வைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவருக்கு கடிதம் அளித்தனர்.
இலங்கைக்கு இந்தியா தனது முழு ஆதரவை அளிக்கும்… வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி!!
ஒரு கட்சியில் பாதிக்கும் மேற்பட்ட எம்பிக்கள் தனியாக செயல்படத் தொடங்கிவிட்டால், அவர்கள் தலைவரைத் தேர்வு செய்ய உரிமை இருக்கிறது என்பதால், ராகுல் ஷிவாலேயே தலைவராக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இது தொடர்பாக நேற்று இரவு மக்களவைச் செயலாளர் சுற்றறிக்கை மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்தார். இதன் மூலம் மக்களவையிலும் சிவசேனாவின் குரல் இனி ஓங்கி ஒலிக்காது. சிவசேனா கட்சிக்கு 19 எம்பிக்கள் மக்களவையில் இருந்தாலும் அதில் 7 பேர் மட்டுமே கட்சியின் உத்தரவுக்கு கட்டுப்பாடுவார்கள். மீதமிருக்கும் 12 போட்டி எம்.பிக்கள் ஏக்நாத் ஷிண்டே உத்தரவுக்கு படிவார்கள்.
சிவசேனா கட்சி சார்பில் மக்களவைத் தலைவராக நியமிக்கப்பட்ட வினாயக் ராவத் மீது போட்டி எம்.பி.க்களுக்கு நம்பிக்கையில்லை. அதனால், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக தனியாகச் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடை... உச்சநீதிமன்றம் அதிரடி!!
மகாராஷ்டிராவில் ஏற்கெனவே 45 எம்எல்ஏக்களை இழந்து சிவசேனா கட்சி ஆட்சியை பறிகொடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஓரளவுக்கு அதிகாரத்துடன் இருந்து வந்தநிலையில் எம்.பி.க்களும் மாறிவிட்டதால், சிவசேனா கட்சியின் திரிசங்கு நிலையில் இருக்கிறது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஸ் அகாதி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், சிவசேனாவின் மூத்த எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்எல்ஏக்கள் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து, பெரும்பான்மை இல்லாமல் மகாவிகாஸ் அகாதி அரசு கவிழ்ந்தது.
உடைந்தது சிவசேனா ; ஷிண்டே ஆதரவு எம்.பி.க்கள் தனிக்குழு: சின்னத்துக்கு போராடத் தயார்: ராவத்
பாஜகவின் துணையுடன், ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். சட்டப்பேரவையைிலும் பெரும்பான்மையை ஷிண்டே நிரூபித்துவிட்டார். சட்டப்பேரவையில் மட்டும்தான் சிவசேனா கட்சி பிளவுபட்டது என்றால, தற்போது நாடாளுமன்றத்திலும் பிளவுபட்டுள்ளது. பால்தாக்கரே கட்டமைத்த சிவ சேனா கட்சி உடைக்கப்படுகிறது