CWG 2022: modi: மனஅழுத்தமின்றி விளையாடுங்கள்: காமென்வெல்த் விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

By Pothy RajFirst Published Jul 20, 2022, 12:18 PM IST
Highlights

பிரிட்டனில் நடக்கும் காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாடினார்.

பிரிட்டனில் நடக்கும் காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாடினார்.

பிரிட்டனின் பிர்மிங்ஹாம் நகரில் வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட்8ம் தேதிவரை காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடக்க உள்ளன. இதில் 141 விளையாட்டுப் பிரிவுகளில் 19 விளையாட்டுகளில் 215 பேர் பங்கேற்கிறார்கள். 

இந்நிலையில் பிர்மிங்ஹாம் புறப்படும்முன், இந்தியவீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி காணொலியில் கலந்துரையாடினார். அப்போது வீரர்கள்,வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களைப்பெற வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

:பெட்ரோல், டீசல் ஏற்றுமதி வரி குறைப்பு: கையைச் சுட்டுக்கொண்ட மத்திய அரசு: அம்பானிக்கு நிம்மதி

இந்திய வீரார்களில் 3ஆயிரம்மீட்டர் ஸ்டீபிள்சேர் வீரர் அவினாஷ் சேபில், பளுதூக்குதல் வீராங்கனை அசிந்தா சீயுலி, மகளிர் ஹாக்கி வீராங்கனை சாலிமா தெத்தே, சைக்கிள் வீரர் டேவிட் பெக்ஹாம், குண்டு எறிதல் வீராங்கனை ஷர்மிலா ஆகியோருடன் பிரதமர் மோடி பேசினார். 

ஒவ்வொரு வீராங்கனைகளிடமும் எத்தகைய கடினமான பாதைகளைக் கடந்து இந்த இடத்துக்கு வந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அவினாஷி சேபில் கூறுகையில் “ கடந்த 2012ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து 4 ஆண்டுகள் வழக்கமான பணியைச் செய்தேன். தடகளத்தில் சேர்ந்தபின், ராணுவத்தின் பயிற்சி, பனிமலை ஏற்றம் எனக்கு பல்வேறு தரப்பில் போட்டிகளில் பங்கேற்க உதவியது” எனத் தெரிவித்தார்

சிவசேனா கதை முடிகிறதா? 12 எம்.பி.க்கள் ஷிண்டே பக்கம்: புதிய அவைத் தலைவர் தேர்வு

இந்த கலந்துரையாடலில் பேசிய பிரதமர் மோடி “ வீரர்கள் அனைவரும் மன அழுத்தமின்றி, முழுத்திறமையையும் வெளிப்படுத்தி விளையாடுங்கள்” என வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் ஒலிம்பி பதக்க பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மகளிர் ஹாக்கி கோல்கீப்பர் சவிதா பூனியா, ரியோ கேம்ஸ் வெண்கல வீராங்கனை மல்யுத்த வீராங்கனை சாக்ஸி மாலிக், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, குத்துச்சண்டை வீரர் ஷிவா தபா,சுமித், பாட்மிண்டன் வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்சயா சென் ஆகியோர் பங்கேற்றனர்.

ராணுவ காலாட்படை பள்ளியில் வேலை... ரூ.81,100 ஊதியம்... யார் யார் விண்ணப்பிக்கலாம்!!

click me!