தகுதிநீக்கப்பட்ட எம்.பி.: டிவிட்டர் பயோவை மாற்றிய ராகுல் காந்தி!

Published : Mar 26, 2023, 12:03 PM ISTUpdated : Mar 26, 2023, 12:07 PM IST
தகுதிநீக்கப்பட்ட எம்.பி.: டிவிட்டர் பயோவை மாற்றிய ராகுல் காந்தி!

சுருக்கம்

ராகுல் காந்தி தனது ட்விட்டர் கணக்கின் பயோ பகுதியில் 'நாடாளுமன்ற உறுப்பினர்' என்பதற்குப் பதிலாக 'தகுதிநீக்கப்பட்ட எம்பி' என்று மாற்றியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் கணக்கில் பயோவை மாற்றியுள்ளார். டிவிட்டர் பயோ பகுதியில் 'நாடாளுமன்ற உறுப்பினர்' என்று குறிப்பிட்டிருந்ததை 'தகுதிநீக்கப்பட்ட எம்பி' என மாற்றி இருக்கிறார்.

தற்போது ராகுல் காந்தியின் ட்விட்டர் பயோவில் "இது ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ கணக்கு | இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் | தகுதிநீக்கப்பட்ட எம்.பி." என்று இருக்கிறது. ராகுல் காந்தி தகுதி நீக்கத்தைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருநாள் போராட்டம் நடத்தப்படுகிறது.

காங்கிரஸ் போராட்டத்தில் முதல் ஆளாக வந்த ஜெகதீஷ் டைட்லர்: நெட்டிசன்கள் விமர்சனம்

தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதைக் காரணம் காட்டி டெல்லி போலீசார் அந்த உண்ணவிரதப் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

அசம்பாவிதங்களைத் தவிர்க்க ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் தடையை மீறி போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். அதன்படி, காங்கிரஸ் கட்சியினர் காவல்துறை அனுமதி மறுத்ததை மீறி அமைதி வழியில் போராட்டம் நடத்துகின்றனர்.

மோடி என்ற பெயரை பற்றி  அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

வயநாட்டில் இப்படின்னா; கர்நாடகாவுல வேற மாதிரி; கூட்டத்துக்கு வரணும்ன்னா அலவன்ஸ் வேணுமாம்!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!