சத்தீஸ்கரில் மக்களுடன் உரையாடியபடி ரயிலில் பயணம் செய்த ராகுல் காந்தி!

By SG Balan  |  First Published Sep 26, 2023, 7:39 AM IST

ரயில் பயணத்தின்போது குழந்தைகள் உட்பட பயணிகளுடன் ராகுல் காந்தி உரையாடினார் என மாநில காங்கிரஸ் தலைவர் பைஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் அங்கிருந்து மாநிலத் தலைநகர் ராய்ப்பூருக்கு ரயிலில் பயணம் செய்தார். அப்போது உடன் பயணித்த மக்களுடன்  உரையாடினார்.

காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு  ஒருநாள் பயணமாக ராகுல் காந்தி அந்த மாநிலத்திற்குச் சென்றார்.

Tap to resize

Latest Videos

கடந்த சில மாதங்களில் மாநிலத்தில் 2,600 ரயில்களை ரயில்வே அமைச்சகம் ரத்து செய்துள்ளதாகவும், இதனால் மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. இந்நிலையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அந்த மாநிலத்தில் ரயிலில் பயணித்ததிருக்கிறார்.

வீட்டுக்கடனில் பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர் செய்யலாமா? அதனால் மொத்த கடன் குறையுமா?

ராய்ப்பூரில் இருந்து 125 கி.மீ தொலைவில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தில் பர்சடா (சக்ரி) கிராமத்தில் பிற்பகலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பின் பிலாஸ்பூர்-இத்வாரி இன்டர்சிட்டி ரயிலில் பொதுப் பெட்டியில் பயணம் செய்தனர். முதல்வர் பூபேஷ் பாகேல், காங்கிரஸ் மாநிலப் பொறுப்பாளர் குமாரி செல்ஜா மற்றும் மாநிலத் தலைவர் தீபக் பைஜ் ஆகியோரும் அவருடன் பயணித்தனர்.

இந்த ரயில் மாலை 5:50 மணிக்கு ராய்ப்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு கட்சி எம்எல்ஏ குல்தீப் ஜுனேஜா உட்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் ராகுல் காந்தியை வரவேற்றனர்.

ரயில் பயணத்தின்போது குழந்தைகள் உட்பட பயணிகளுடன் ராகுல் காந்தி உரையாடினார் என மாநில காங்கிரஸ் தலைவர் பைஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ரயிலில் காந்தியுடன் உரையாடிய ஒரு பெண், தான் ஒரு ஹாக்கி வீராங்கனை என்றும், ராஜ்நந்த்கானில் உள்ள ஆஸ்ட்ரோடர்ஃப் மைதானம் மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

"மைதானத்தில் புதிய புல்தரை வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன்" என அந்த ஹாக்கி வீராங்கனை தெரிவிக்கிறார். அவருடன் வேறு சில ஹாக்கி வீராங்கனைகளும் இருந்தனர். ராஜ்நந்த்கானில் உள்ள கேலோ இந்தியா மையத்தில் வீரர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் பிற வசதிகள் குறித்தும் ராகுல் காந்தி கேட்டறிந்தார் என விளையாட்டு வீரர்களுடன் வந்த ஒருவர் கூறினார்.

ஜோஷிமத் பகுதியில் புதிய கட்டிடங்களுக்குத் தடை விதிக்கப்படுமா? எட்டு முக்கிய ஆய்வு நிறுவனங்கள் பரிந்துரை

click me!