துக்ளக் சாலையில் உள்ள வீட்டை காலி செய்வதாக மக்களவை செயலருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக வசித்து வரும் பங்களாவை காலி செய்யுமாறு மக்களவை வீட்டு வசதிக் குழு நோட்டீஸ் அனுப்பியது.
மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அரசு ஒதுக்கிய பங்களாவை காலி செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவை வீட்டு வசதிக் குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் மக்களவை செயலருக்கு ராகுல் காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “துக்ளக் சாலையில் உள்ள வீட்டை காலி செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், “கடந்த நான்கு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக, நான் இங்கு கழித்த காலத்தின் மகிழ்ச்சியான நினைவுகள் பல இருக்கிறது. எனது உரிமைகளுக்கு எந்தப் பாதகமும் இல்லாமல், உங்கள் கடிதத்தில் உள்ள விவரங்களை நான் நிச்சயமாகக் கடைப்பிடிப்பேன்.
2004 ஆம் ஆண்டு எம்.பியாக ஆன ராகுல் காந்தி, 2005 ஆம் ஆண்டு முதல் இந்த பங்களாவில் குடியிருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யப்போவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
துக்ளக் சாலையில் உள்ள வீட்டை காலி செய்வதாக மக்களவை செயலருக்கு ராகுல் காந்தி கடிதம். pic.twitter.com/IK3obTql9m
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ
இதையும் படிங்க..நமீபியா டூ இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலி மரணம் - என்ன காரணம் தெரியுமா?