மீண்டும் அதானி... ரகசிய முதலீடுகள் யாருடையவை? கேள்விகளால் துளைக்கும் ராகுல் காந்தி!

By SG Balan  |  First Published Aug 31, 2023, 6:12 PM IST

அதானி குழுமத்தில் செய்யப்பட்ட ரகசிய முதலீடுகள் யாருடையவை என்று விசாரிக்க பிரதமர் மோடி உத்தரவிடாத்து ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.


காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அதானி குழுமத்தில் ரகசியமாக முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதாக புதிதாக வெளியாகியுள்ள செய்திகளைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். அதானி குழுமத்தில் செய்யப்பட்ட ரகசிய முதலீடுகள் யாருடையவை என்று கேட்ட ராகுல் காந்தி, இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த ஏன் உத்தரவிடவில்லை என்றும் கேட்டிருக்கிறார்.

Tap to resize

Latest Videos

தற்போதைய G20 உச்ச மாநாடு நடைபெறும் சூழலில், பொருளாதாரச் சூழல் மற்றும் வணிகங்களில் ஒரு சமநிலை மற்றும் வெளிப்படைத்தன்மை இருப்பதான் இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என்றார்.

சுழன்று விளையாடிய பிரக்யான் ரோவர்! பார்த்து ரசித்த விக்ரம் லேண்டர்! இஸ்ரோ சொன்ன குட்டி ஸ்டோரி!

இரண்டு உலகளாவிய செய்தித்தாள்களில் அதானி குழுமம் தொடர்பாக மிக முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளன என்ற அவர் ஜி20 உச்ச மாநாட்டுக்காக தலைவர்கள் இந்தியாவுக்கு வரும் வேளையில் வெளியாகியுள்ள இந்தச் செய்திகள் உலக அரங்கில் பிற நாடுகளில் இந்தியா பற்றிய பார்வையை பாதிக்கும் என்று கவலை தெரிவித்தார்.

"முதலில் எழும் கேள்வி இந்த மூதலீடுகள் யாருடைய பணம்? இது அதானியுடையது தானா அல்லது வேறு யாருடையதுமா? இதற்கு மூளையாக செயல்பட்டவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி. இந்தப் பண மோசடியில் மேலும் இருவர் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் நசீர் அலி ஷபான் அஹ்லி என்ற ஜென்டில்மேன். மற்றொருவர் சாங் சுங் லிங் சீன ஜென்டில்மேன். எனவே, இரண்டாவது கேள்வி எழுகிறது. கிட்டத்தட்ட அனைத்து இந்திய உள்கட்டமைப்புகளையும் கட்டுப்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றில் இரண்டு வெளிநாட்டினர் புகுந்து விளையாட அனுமதிக்கப்படுவது ஏன்?" என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

விசாரணை நடத்தப்பட்டு, செபியின் (SEBI) சான்றுகள் வழங்கப்பட்டு, கவுதம் அதானிக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது என்ற ராகுல் இங்கே ஏதோ தவறு நடத்திருக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டார்.

நகைக்கடைக்காரிடம் நேக்காக ஆட்டைய போட்ட சீட்டிங் சாம்பியன்ஸ்! உங்களுக்கும் இப்படி நடக்காம பாத்துக்கோங்க!

click me!