இந்துத்துவா தலைவர் வீர சவார்க்கரை அவமதித்துவிட்டார் எனக் கூறி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது சவார்க்கரின் பேரன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இந்துத்துவா தலைவர் வீர சவார்க்கரை அவமதித்துவிட்டார் எனக் கூறி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது சவார்க்கரின் பேரன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை செல்லும் போது வீர சவார்க்கர் விவகாரம் அனலைக் களப்பியுள்ளது. சவார்க்கர் குறித்து ராகுல் காந்தியின் கடும் விமர்சனத்துக்கு சிவசேனா உடன்படவில்லை. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆனால், ராகுல் காந்தி, சவார்க்கர் குறித்த தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருக்கிறார்.
சவார்க்கர் விவகாரத்தில் முட்டிக்கொண்ட ராகுல் காந்தி, உத்தவ் தாக்கரே! கூட்டணி அவ்வளவுதானா!
மகாராஷ்டிராவில் தற்போது பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். அகோலா நகரில் நேற்று ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களிடம் சவார்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துதான் வெளியேறினார்.
உங்களின் ஒழுங்கான வேலையாள் எழுதி சவார்க்கர் கையொப்பமிட்டுள்ளார். என்ன காரணம். பயம். ஆங்கிலேயர்களைப் பார்த்துப் பயம். யாரேனும் தங்களின் சித்தாந்தங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றால் துணிந்து வர வேண்டும்.
இந்த கடித்தத்தில் சவார்க்கர்தான் கையொமிட்டுள்ளார் என்பது என்னுடைய கருத்து. நேரு, வல்லபாய் படேல் சிறையில் இருந்தபோது அவர்கள் இதுபோன்ற எந்தக் கடிதத்தையும் எழுதிக் கொடுக்கவில்லை.
இருவிதமான சித்தாந்தங்கள் உள்ளன. எங்கள் கட்சியில் வெளிப்படையான விவாதங்கள் உண்டு. சர்வாதிகாரம் இல்லை பழங்குடியினத் தலைவர் பிர்சா முன்டாவுக்கு ஆங்கிலேயர்கள் நிலம் அளித்தனர்.
எல்பிஜி கேஸ் சிலிண்டரில் புதிய மாற்றம்! QR குறியீட்டை அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு: என்ன காரணம்?
ஆனால், அதைப் பெற அவர் மறுத்து அடங்கிப்போக மறுத்துவிட்டார் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அவர் மதிப்பிற்குரிய தலைவர். ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியேவந்த சவார்க்கர்தான் பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தலைவர். ” எனத் தெரிவித்தார்
சவார்க்கர் குறித்து ராகுல் காந்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ், சிவசேனா இருந்தாலும் சவார்க்கர் விவகாரத்தில் இருதரப்பும் முட்டிக்கொண்டன. சவர்க்கருக்கு ஆதரவாக பாஜகவும் கருத்தை முன்வைத்துள்ளது.
இந்நிலையில் சவார்க்கரின் பேரன் மும்பையில் உள்ள சிவாஜி பார்க் காவல் நிலையிலத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். அதில் “ சவார்க்கர் குறித்து அவதூறன கருத்துக்களை ராகுல்காந்தி, நானா படோல் பரப்புகிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முறையான பொருளாதாரத்தை விரிவுபடுத்தவே பணமதிப்பிழப்பு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
இது குறித்து மும்பை போலீஸார் கூறுகையில் “ சவார்க்கர் பேரன் ராகுல் காந்தி, நானா படேல் மீது புகார் அளித்தது உண்மைதான். இதுவரை யார் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. விசாரணை நடந்துவருகிறது” எனத் தெரிவித்தனர்.