இரண்டாம் முறையாக ஏடிஎம் வரிசையில் நின்ற ராகுல் காந்தி..!!

First Published Nov 16, 2016, 10:19 PM IST
Highlights


1000 மற்றும் 500 ரூபாய்ட் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகள் முன்பு தினசரி காத்துகிடக்கும் நிலை உருவாகி உள்ளது. 

வட இந்தியாவில் தான் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வடமாநிலங்களில் ஏடிஎம்கள் எண்ணிக்கையும் குறைவு, வங்கிகள் எண்ணிக்கையும் குறைவு இதனால் பொதுமக்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். 

பொதுமக்களின் துன்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அரசு மக்களை துன்பப்படுத்துவதாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் ராகுல் வழியை பின்பற்றி மு.க.ஸ்டாலின் மக்களின் குறையை நேற்று கேட்டறிந்தார். பிரதமர் மோடியின் தாயார் குஜராத்தில் வரிசையில் நின்று பணத்தை மாற்றினார்.

இந்த நிகழ்வுகளின் அடுத்த கட்டமாக மகாராஷ்டிர மாநிலத்தில் இடத்துக்கு சென்ற காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் அங்குள்ள வங்கியின் முன் இருந்த ஏடிஎம்மில் வரிசையில் நின்றார். பின்னர் அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ராகுல்காந்தி பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிவதன் மூலம் பாராளுமன்றத்தில் மக்களின் குறைகளை ராகுல் காந்தி உயிர்ப்புடன் பிரதிபளிக்க முடியும் என காங்கிரஸ் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.

வரிசையில் நின்ற ராகுலிடம் அங்குள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி மத்திய அரசு எதைஅயும் முறையாக செய்யவில்லை. கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்கிறார்கள் கருப்பு பணம் வைத்திருக்கும் எந்த முதலாளியும் கியூவில் நிற்கவில்லை சாமானிய மக்களே கியூவில் நிற்கிறார்கள், கேன்சர் நோயாளி உட்பட பொதுமக்கள் வரிசையில் வாடிநிற்கின்ற நிலை உள்ளது என்று தெரிவித்தார்.
பெண்களுக்காக தனி வரிசையாவது வங்கியில் வைக்கலாம் என ராகுல் காந்தி யோசனை சொன்னார் .

click me!