அதானிக்கு 20,000 கோடி எங்கிருந்து வந்தது.? சிறையில் அடைத்தாலும் கேள்வி கேட்பேன் - பிரதமருக்கு ராகுல் கேள்வி

By Raghupati R  |  First Published Mar 25, 2023, 1:19 PM IST

தகுதி நீக்கம் தொடர்பாக ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.


2019 மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக கூறப்படும் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.நீதிமன்ற தீர்ப்பையடுத்து, வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகான ஆறு என மொத்தம் எட்டு ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து இதுபற்றி விளக்கமளித்தார்.

Tap to resize

Latest Videos

*நாடாளுமன்றத்தில் என்னை பற்றி தவறான குற்றச்சாட்டுகள் பரப்படுகிறன்றனர். மேலும், நாடாளுமன்றத்தில் அதானி பற்றி நான் பேசிய அனைத்து கருத்துக்களும் நீக்கப்பட்டு விட்டன. 

* மோடி அதானி தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் கேட்டேன். 

* நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் உள்ள நட்பை பற்றி நான் கேள்வி கேட்டிருந்தேன்.

* லண்டனில் நான் பேசியது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் தவறான தகவல்களை கொடுக்கிறார்கள். நான் கேள்வி கேட்பதை நிறுத்தப்போவதில்லை.

* 20,000 பில்லியன் டாலர் எங்கு இருந்து வந்தது? யார் உதவி செய்தது. செல் கம்பெனிகள் யாருடையது. யார் சீனா நாட்டைச் சேர்ந்தவர். பிரதமருக்கு இதில் என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்டேன்.

* பிரதமரிடம் மூன்று கேள்விகளை கேட்டேன். நான் ஆதாரத்துடன்  வருகிறேன்.என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை பாஜகவினர் வைக்கின்றனர். அதானியுடன் பிரதமர் மோடிக்கு என்ன தொடர்பு இருக்கிறது.

* கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன்.  என் குரலை யாராலும் ஒடுக்க முடியாது. என்னை சிறையில் அடைத்தாலும் கேள்வி கேட்பேன். 20,000 பில்லியன் டாலர் எங்கு இருந்து வந்தது? யார் உதவி செய்தது.

* செல் கம்பெனிகள் யாருடையது. யார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்? என்று அடுக்கடுக்காக பிரதமருக்கு எதிராக கேள்விகளை கூறினார்.

* அதானி குறித்து நான் பேசும்போது அவரது கண்களில் பயம் தெரிந்தது. சிறை தண்டனை, தகுதி நீக்கத்தை பார்த்து ஒருபோதும் நான் பயப்பட மாட்டேன்.

இதையும் படிங்க..Group 4 Cut off : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்

இதையும் படிங்க..உச்ச நீதிமன்றத்துக்கு போக முடியாது.. பதவியும் போச்சு.! என்ன செய்ய போகிறார் ராகுல் காந்தி.?

click me!