அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட சூழ்நிலையில், ராகுலுக்கு அடுத்த நெருக்கடி வந்துள்ளது.
2019 மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக கூறப்படும் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, "எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயராக இருப்பது எப்படி" என்று பேசினார். இந்த அவமதிப்பு வழக்குக்கு தான் தீர்ப்பு வந்துள்ளது.
இத்தீர்ப்பு வெளியானபோது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இறந்தார். 10,000 ஜாமீன் பத்திரத்தை செலுத்தி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து எம்.பி ராகுல் காந்தி ஜாமீன் பெற்றார். தற்போது எம்.பி.யாக இருப்பதால், அவர் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார் என்ற தகவல் வெளியான நிலையில் அதிர்ச்சியான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க..Group 4 Cut off : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தீர்ப்பையடுத்து, வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகான ஆறு என மொத்தம் எட்டு ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்படுகிறது.
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரசு பங்களாவில் அவர் குடியிருக்க முடியாது. ஆகையால் தகுதி நீக்க உத்தரவு வெளியான ஒரு மாதத்திற்குள் பங்களாவை காலி செய்ய வேண்டும் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ராகுல் காந்தி மேல் நீதிமன்றத்தில்ல் தன் மீதான தீர்ப்புக்கு தடை உத்தரவு பெற வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க..உச்ச நீதிமன்றத்துக்கு போக முடியாது.. பதவியும் போச்சு.! என்ன செய்ய போகிறார் ராகுல் காந்தி.?