rahul gandhi: narendra modi: பிரதமர் மோடிக்கு 10 கேள்விகள்: அரசர் எனக்கூறி வம்பிழுத்த ராகுல் காந்தி

Published : Jul 28, 2022, 02:34 PM ISTUpdated : Jul 28, 2022, 02:36 PM IST
rahul gandhi: narendra modi: பிரதமர் மோடிக்கு 10 கேள்விகள்: அரசர் எனக்கூறி வம்பிழுத்த ராகுல் காந்தி

சுருக்கம்

பிரதமர் மோடி (அரசரிடம்) மக்களின் கேள்விகளைக் கேட்டதற்காக, எம்.பி.க்களை கைது செய்து, சஸ்பெண்ட் செய்து சர்வாதிகாரி போல் நடந்துகொள்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி (அரசரிடம்) மக்களின் கேள்விகளைக் கேட்டதற்காக, எம்.பி.க்களை கைது செய்து, சஸ்பெண்ட் செய்து சர்வாதிகாரி போல் நடந்துகொள்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மாநிலங்களவை, மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்திய எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். 

ஜனாதிபதி குறித்து காங்கிரஸ் எம்.பி. ‘டங்க் ஸ்லிப்’ பேச்சு: வரிந்து கட்டும் பாஜக

இந்த இரு சம்பவங்களைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு 10 கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் அதில் கூறியதாவது:

நான் “அரசரிடம்” 10 கேள்விகளை முன்வைக்கிறேன். வேலையின்மை, அக்னிபாத் திட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எல்லைப் பிரச்சினை, குறைந்தபட்ச ஆதாரவிலை, விவசாயிகள் வருமானம், ரூபாய் மதிப்பு சரிவு உள்ளி்ட்டவை குறித்து கேட்கிறேன்.

மழைக்காலக் கூட்டத்தொடரில் நாங்கள் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் விவாதிக்க விரும்பினோம். மக்களிடம் இருந்து ஏராளமான கேள்விகள் உள்ளன, பிரதமரும், அவரின் அமைச்சர்களும் பதில் அளிக்க வேண்டும்.

ஆனால்,அவரின் சர்வாதிகாரத்தைப் பாருங்கள், கேள்விகள் கேட்டதற்காக கோப்பட்டு57 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டார்கள், 23 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.

Partha Chatterjee: ரூ.28 கோடி பணம், தங்க நகைகள்: பர்தா சாட்டர்ஜிக்கு வீட்டிலிருந்து அமலாக்கப்பிரிவு பறிமுதல்

1.    நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையின்மை அதிகரித்துள்ளது ஏன்? ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தரப்படும் என்று கூறிய வாக்குறுதி என்னாயிற்று?

2.    மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தயிர், தானியங்கள், பருப்புகளுக்கு ஜிஎஸ்டி வரி விதித்து, அவர்களின் உணவை ஏன் பிடுங்கினீர்கள்?

3.    சமையல் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்விலிருந்து மக்களுக்கு எப்போது விடிவுகாலம் கிடைக்கும்?

4.    அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 80ரூபாய்க்கும் கீழ் வீழ்ச்சி அடைந்தது ஏன்?

5.    கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்தில் யாரும் வேலைக்கு எடுக்கப்படவில்லை. இளைஞர்கள் அக்னிவீர் என்ற பெயரில் 4 ஆண்டு ஒப்பந்தத்தில் சேர ஏன் வற்புறுத்தப்படுகிறார்கள்?

6.    லகடாக் மற்றும் அருணாச்சலப்பிரதேசம் பகுதியில் சீன ராணுவம்நமது எல்லைக்குள் நுழைந்துவிட்டார்கள். ஏன் நீங்கள் மவுனமாக இருக்கிறீர்கள், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

7.    பயிர்காப்பீடு மூலம்காப்பீடு நிறுவனங்கள் ரூ.40ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது.ஆனால், விவசாயிகள் வருமான் இரட்டிப்பாக்கப்படும் என்பதில் ஏன் அரசு மவுனமாக இருக்கிறது?

8.    விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்சஆதார விலை உறுதியளித்தது என்னவாயிற்று. விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு தருவது என்னஆயிற்று?

9.    ரயில்  பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி இருந்தது. அதை ஏன் ரத்து செய்தீர்கள். விளம்பரத்துக்காக செலவிடும்போது, முதியோருக்கு கட்டணச் சலுகை அளிக்க அரசிடம் பணம் இல்லையா?

10.    மத்திய அரசின் கடன் கடந்த 2014ம் ஆண்டில் ரூ56 லட்சம் கோடி இருந்தது. இது தற்போது  ரூ.139 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது, 2023 மார்ச் மாதத்தில் ரூ.156 லட்சம் கோடியாக அதிகரிக்கும். ஏன் தேசத்தை கடனில் தள்ளினீர்கள்?

கல்லாகட்டும் மத்திய அரசு! 5ஜி அலைக்கற்றை 2ம் நாள் ஏலத்தில் ரூ.1.49 லட்சம் கோடி குவிந்தது

என்னிடம் இருக்கும் கேள்விகள் நீளமானவை ஆதலால் முதலில் இந்த 10 கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்கட்டும். காங்கிரஸ் கட்சியை மிரட்டுவதால், உங்களின் பொறுப்பு முடிந்துவிடாது. நாங்கள் மக்களின் குரல்கள், தொடர்ந்து இ்ந்த விவகாரத்தை எழுப்புவோம்

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!