அடக் கடவுளே.. ஒரே ஊசியை வைத்து 30 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி... மத்திய பிரதேசத்தில் அவலம்..

Published : Jul 28, 2022, 01:58 PM ISTUpdated : Jul 28, 2022, 02:06 PM IST
அடக் கடவுளே.. ஒரே ஊசியை வைத்து 30 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி... மத்திய பிரதேசத்தில் அவலம்..

சுருக்கம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே ஊசியை வைத்து 30 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்தவர்கள் இதுதொடர்பாக வீடியோ எடுத்து வெளியிட்டதன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே ஊசியை வைத்து 30 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்தவர்கள் இதுதொடர்பாக வீடியோ எடுத்து வெளியிட்டதன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. தடுப்பூசி கண்டுபிடித்து அது நாடு முழுவதும் மக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது, இதனால் மக்கள் ஓரளவுக்கு வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடிகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், அதேபோல் ஒரு ஊசியை ஒரு முறை தான் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் மத்திய பிரதேச மாநிலம் சாகரில் ஒரே ஊசி மூலம் 30 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்ததன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:-உத்தரபிரதேச மாநிலம் சாகர் நகரில் உள்ள ஜெயின் பப்ளிக் மேல்நிலைபள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது, அப்போது தடுப்பூசி செலுத்த வந்த பணியாளர் ஜிதேந்தர் ஒரே சிரஞ்சீவி மூலம் 30 மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தினார்.

இதையும் படியுங்கள்: பார்த்தா சாட்டர்ஜியை நீக்க முதலில் டுவீட்; திடீரென பல்டி அடித்த மூத்த தலைவர்; என்ன நடந்தது?

இதை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், இதை வீடியோ எடுத்தனர், ஒரே ஊசி மூலம் இப்படி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது நியாயம்தானா என கேட்டனர், அதற்கு அந்த நபர், என்னிடம் அதிகாரிகள் ஒரே ஊசி மட்டுமே கொடுத்தனுப்பினர், அதற்கு நான் என்ன செய்ய முடியும் என பொறுப்பற்ற முறையில் பதிலளித்தார்.

இதையும் படியுங்கள்: Partha Chatterjee: ரூ.28 கோடி பணம், தங்க நகைகள்: பர்தா சாட்டர்ஜிக்கு வீட்டிலிருந்து அமலாக்கப்பிரிவு பறிமுதல்

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஒரு ஊசியை வைத்து பலருக்கு ஊசி போட கூடாது என்று உங்களுக்கு தெரியாதா என்று கேட்டனர், அதற்கு அந்த நபர், ஆம் அது எனக்கு தெரியும் என கூறியதுடன், நானும் ஒரே ஒரு ஊசியை வைத்து எப்படி 30 பேருக்கு போட முடியும் என்றும் அதிகாரியிடம் கேட்டேன், அதற்கு அவர்கள் ஒரே ஊசியில் போடும்படி கூறினர். இதில் என்னுடைய தவறு என்ன இருக்கிறது என கேள்வி எழுப்பினார். 

திக்குமுக்காடி போன பெற்றோர், இந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டனர், இந்த வாரம் பூதாகரமானது, இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி செலுத்திய நபர் ஜித்தேந்தர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. தடுப்பூசி முகாம்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பொறுப்பிலிருந்த மாவட்ட நோய் தடுப்பு அலுவலர் டாக்டர் ராகேஷ் ரோஷன் மீதும் துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் புகார் எழுந்தவுடன் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலரை ஆய்வு செய்யுமாறு மாவட்ட பொறுப்பு கலெக்டர் ஷிதிஜ் சிங்கால் உத்தரவிட்டுள்ளார், ஆனால் அந்த ஆய்வின்போது ஜித்தேந்தர் மாயமானார், அவரது செல்போனை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!