கருணாநிதிக்கு வைர விழா….சோனியா காந்தி வரலையாம்…ராகுல்தான் வருகிறாராம்…

 
Published : May 18, 2017, 07:47 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
கருணாநிதிக்கு வைர விழா….சோனியா காந்தி வரலையாம்…ராகுல்தான் வருகிறாராம்…

சுருக்கம்

ragul participate karunanidh function

கருணாநிதிக்கு வைர விழா….சோனியா காந்தி வரலையாம்…ராகுல்தான் வருகிறாராம்…

கருணாநிதியின் சட்டசபை வைர விழாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின், துணை தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, சட்டசபை உறுப்பினராகி, இந்த ஆண்டுடன், 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதற்கான வைர விழா, சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், ஜூன், 3ல் நடக்கிறது.

இவ்விழாவில்  பீஹார் முதலமைச்சர்  நிதிஷ்குமார், லாலு பிரசாத், கம்யூனிஸ்ட் தலைவர்கள், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

திமுக வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் சோனியா காந்தி பங்கேற்பார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  சோனியா காந்தி  உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளாதால், இவ்விழாவில் காங்கிரஸ் கட்சியின்  துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி பிரச்னை காரணமாக, கர்நாடக முதல்வர், சித்தராமையா இவ்விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என தெரியவருகிறது. மேலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

PREV
click me!

Recommended Stories

பால் பொருட்களில் கலப்படம் அதிகரிப்பு! நாடு முழுவதும் ரெய்டு நடத்த FSSAI அதிரடி உத்தரவு!
ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!