சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் வருகிறது ‘கிரேடு முறை’ - கட்டண கொள்ளைக்கு தடை...

 
Published : May 17, 2017, 09:40 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் வருகிறது ‘கிரேடு முறை’ - கட்டண கொள்ளைக்கு தடை...

சுருக்கம்

Central Government Scheme to Grade for cbsc schools

சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கற்பிக்கும் திறன், திறமை, மாணவர்களின் பாஸ் செய்யும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் கிரேடுமுறையை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு மட்டுமே கிரேடுமுறைதற்போது இருந்து வரும் நிலையில், இனிமேல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் கிரேடு முறை விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாகத் தெரிகிறது.

நாட்டில் தற்போது சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் பெற்று 18 ஆயிரம் பள்ளிகளும், வௌிநாடுகளில் 250 பள்ளிகளும் இயங்குகின்றன. இவற்றுக்கு கிரேடு முறை வழங்கப்பட உள்ளது.

இது குறித்து சி.பி.எஸ்.இ. அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கிரேடு முறை கொடுக்கப்படும் போது, பள்ளிகளின் கல்வித்தரம் மேலும் அதிகரிக்கும், ஆடம்பரமான போக்கும், விளம்பரமும் குறையும்’’ எனத் தெரிவித்தார்.

இது குறித்து சி.பி.எஸ்.இ. தலைவர் ஆர்.கே. சதுர்வேதியிடம்நிருபர்கள் கேட்டபோது, “ சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கிரேடு முறை கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருகிறோம். இதனால், பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளின் தரத்தைக் காட்டிலும், கல்வியின் தரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். இதன் மூலம் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் மூலம் தரப்படும் பொய்யான வாக்குறுதிகள், நியாயமில்லாத வாக்குறுதிகள் தடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.

மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பல சி.பி.எஸ்.இ. பள்ளி நிர்வாகங்கள் பகட்டான கட்டிடங்களை பெற்றோர்களிடம் காட்டியும் நியாயமில்லாத வாக்குறுதிகளையும், பொய்யான கோரிக்கைகளையும் கொடுத்து அதிகமான கட்டணங்களை வசூலிக்கின்றன. இதனால், எப்படி பெற்றோர்களால் உண்மையை எப்படி கண்டுபிடிக்க முடியும். இந்த முறையில் பெற்றோர்கள் தரமான பள்ளியை அடையாளம் கண்டு பிள்ளைகளை சேர்க்க முடியும்’’ எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

விமானத்தைப்போலவே ரயிலிலும் வந்த புதிய விதி..! இனி கூடுதல் லக்கேஜ்ஜை எடுத்து செல்ல கட்டணம்..! எந்த வகுப்புக்கு எவ்வளவு தெரியுமா?
இன்சூரன்ஸ் துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!