நீட் தேர்வில் மாணவியின் உள்ளாடை அகற்றிய விவகாரம்: சி.பி.எஸ்.இ. தலைவருக்கு பறந்தது ‘நோட்டீஸ்’

 
Published : May 17, 2017, 09:07 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
நீட் தேர்வில் மாணவியின் உள்ளாடை அகற்றிய விவகாரம்: சி.பி.எஸ்.இ. தலைவருக்கு பறந்தது ‘நோட்டீஸ்’

சுருக்கம்

The issue of removing students inner in the exam is CBSE Notice that the leader flew

நீட் தேர்வில் கேரள மாணவியின் உள்ளாடை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையம், சி.பி.எஸ்.இ. தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ பொது நுழைவுத்தேர்வு கடந்த 7-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்களின் சட்டை அரைக்கையாக கத்திரிக்கோலால் வெட்டப்பட்டது,  மாணவிகள் தலையில் அணிந்திருந்த கிளிப்புகள், தோடுகள், அகற்றப்பட்டு அலங்கோலமாக்கப்பட்டாவ்கள். மாணவ, மாணவிகளின் காதுக்குள் டார்ச் லைட் அடித்து சோதனை செய்யப்பட்டது.

இதில் உச்சக்கட்டமாக கேரள மாநிலம் கண்ணூரில் நீட் தேர்வு எழுதச் சென்ற ஒரு மாணவியை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதித்தபோது, பீப் சத்தம் எழுந்தது. இதையடுத்து, அந்த மாணவியின் உள்ளாடையை அகற்ற வேண்டும் என்று தேர்வு கண்காணிப்பாளர்கள் கூறினர். உள்ளாடையில் இரும்பு பொத்தான் இருக்கிறது என்று அந்த மாணவி கூறியபோதும் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்து, கண்ணீருடன் உள்ளாடையை அகற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதச் சென்ற கொடுமையும் நடந்தது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கேரள மாநில மகளிர் ஆணையமும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் நீட் தேர்வில் கேரள மாணவியின் உள்ளாடை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையம், சி.பி.எஸ்.இ. தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  நீட் தேர்வில் பல்வேறு இடங்களில் நடந்த கெடுபிடிகள், மாணவ,மாணவிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டது குறித்து 4 வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விமானத்தைப்போலவே ரயிலிலும் வந்த புதிய விதி..! இனி கூடுதல் லக்கேஜ்ஜை எடுத்து செல்ல கட்டணம்..! எந்த வகுப்புக்கு எவ்வளவு தெரியுமா?
இன்சூரன்ஸ் துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!