சிதம்பரம் குரல் எங்களை ஒன்றும் செய்துவிடாது…சி.பி.ஐ.,, வருமானவரித்துறை ரெய்டுக்கு பா.ஜனதா பதில்

First Published May 16, 2017, 11:01 PM IST
Highlights
puyis goel statement

காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுபிரசாத் ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ., வருமானவரித்துறை நடத்திய ரெய்டு குறித்து கருத்து  தெரிவித்த பா.ஜனதா கட்சி, “ ஊழல்வாதிகள் பதில் சொல்ல வேண்டியநாள் இதுவாகும்’’ என விளக்கம் அளித்துள்ளது.

ஐ.என்.எஸ். ஊடக நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு அனுமதி பெற்றுக் கொடுத்தது தொடர்பான குற்றச்சாட்டில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அதேபோல ரூ. ஆயிரம் கோடி பினாமி சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தாரின் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதற்கு காங்கிரஸ் சார்பிலும், ப.சிதம்பரம் சார்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, அரசியல்பழிவாங்கும் செயல், தனது குரலை நசுக்கும் முயற்சி என பா.ஜனதாவை குற்றம்சாட்டி இருந்தனர். 

இது குறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ ப.சிதம்பரத்தை குறிவைக்கிறோம், அவரின்குரலை நசுக்கிறோம் என அவர் குற்றம்சாட்டுகிறார். அப்படியானால், ஏன் அன்னிட முதலீடு மேம்பாட்டு வாரியம் மூலம், அவரின் மகனின் நிறுவனத்துக்கு பணம் செலுத்தப்பட்டது. ப.சிதம்பரம் மத்தியஅரசுக்கு எதிராக எழுதுவதால் ஒன்றும் விளைந்துவிடப்போவதில்லை. எங்களை ஒன்றும் அவரின் குரல் ஒன்றும் செய்ய முடியாது. இவர் எழுதுவதால், யமுனையில் நிதியில் தீப்பிடிக்க போவதில்லை’’ எனத் தெரிவித்தார்.

 

 

 

click me!