ராமரை நம்பினால், ‘முத்தாலக்’கையும் நம்ப வேண்டும் ...1400 ஆண்டுபாரம்பரியம் என முஸ்லிம் குடும்ப சட்டவாரியம் வாதம்…

 
Published : May 16, 2017, 10:06 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
ராமரை நம்பினால், ‘முத்தாலக்’கையும் நம்ப வேண்டும் ...1400 ஆண்டுபாரம்பரியம் என முஸ்லிம் குடும்ப சட்டவாரியம் வாதம்…

சுருக்கம்

thalaq system orgument in Sc

 ‘நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த 1,400 ஆண்டுகளாக முத்தலாக் முறையை முஸ்லிம்கள் பின்பற்றி வருகின்றனர். ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பதை நம்பினால், முத்தலாக் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் குடும்பச் சட்ட வாரியம் வாதம் செய்தது.

தொடரும் சர்ச்சை

முஸ்லிம்கள் மூன்று முறை ‘தலாக்’ என்று கூறி விவகாரத்து செய்யும் நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். இதில் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் முத்தலாக் விவகாரம் பெண்களின் உரிமையை பாதிப்பதாக கூறியது.

இந்த நிலையில் முஸ்லிம்களின் முத்தலாக் விவகாரம், பலதார திருமணம் மற்றும் ‘நிக்காஹ் ஹலாலா’ ஆகிய 3 விவகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

அரசியலமைப்பு அமர்வு

இதனை தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன், யு.யு. லலித் மற்றும் அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகளை உள்ளடக்கிய `அரசமைப்பு சட்ட அமர்வு' விசாரணை மேற்கொண்டுள்ளது. முத்தலாக் விவகாரத்தை விசாரிக்க 6 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முத்தலாக் ஒழிக்கப்பட்டால் அதற்கு மாற்றமாக முஸ்லிம்களின் திருமணம் தொடர்பாக புதிய சட்டங்களை கொண்டு வருவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தனி நீதிமன்றம்

முத்தலாக்கிற்கு எதிராக வாதிட்ட சட்ட வல்லுனர்கள், இந்த விவகாரத்தை முஸ்லிம் மத குருக்கள் தவறாக பயன்படுத்தி, தனி நீதிமன்றத்தையே நடத்துவதாக கூறினர். இந்த கருத்தினை நீதிபதிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டனர். இந்நிலையில், நேற்று 4-வது நாளாக வாதம் நடைபெற்றது. இதில் அனைத்திந்திய முஸ்லிம்கள் குடும்பச் சட்ட வாரியத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சட்ட அமைச்சருமான கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். உச்ச நீதிமன்றத்தில் அவர் வாதிடுகையில், கி.பி. 637-ம் ஆண்டில் இருந்து தற்போது வரைக்கும் சுமார் 1,400 ஆண்டுகளாக முத்தலாக் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

ராமர் - அயோத்தி

நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம்கள் இந்த பழக்கத்தை கடை பிடிக்கின்றனர். எனவே இதில் சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு நெறிகள் மீறப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு இடமில்லை. ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதை நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டால், முத்தலாக்கையும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ள வேண்டும். முகமது நபிக்கு பின்னரும் முத்தலாக் முறை நடைமுறையில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்றார். 5-வது நாள் விவாதம் நாளை  நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 


 

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்