
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் குடும்பத்தினரின் நடவடிக்கைகள் தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பகவந்த் மானின் மனைவி குர்ப்ரீத் கவுரின் கான்வாய் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. குர்பிரீத் கவுருக்கு பாதுகாப்பாக செல்லும் கான்வாய் சுமார் இரண்டு டஜன் வாகனங்களைக் கொண்டுள்ளது.
மாணிக் கோயல் என்ற பயனர் இதுதொடர்பான வீடியோவை X-ல் பதிவிட்டுள்ளார். மேலும் அவரின் பதிவில் “ இது பிரதமர் அல்லது முதலமைச்சர் அல்லது ஒரு மத்திய அமைச்சரின் கான்வாய் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இது நமது பஞ்சாப் முதல்வரின் மனைவி டாக்டர் குர்ப்ரீத் கவுரின் கான்வாய் . டாக்டர். குர்ப்ரீத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியும் இல்லை அல்லது அவர் எந்த அரசியலமைப்பு பதவியையும் வகிக்கவில்லை.
முதல்வரின் மனைவிக்கு 1-2 துப்பாக்கி ஏந்தியவர்கள் இருப்பது மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகளால் நியாயமானது என்பதை நான் சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் அவர் ஏன் நூற்றுக்கணக்கான துப்பாக்கி ஏந்தியவர்களையும் டஜன் கணக்கான பாதுகாப்பு வாகனங்களையும் பயன்படுத்துகிறார். இதே போல் முதல்வரின் மரியாதைக்குரிய தாய் மற்றும் சகோதரி தினசரி பெரிய கான்வாய்கள் மற்றும் பாதுகாப்பைப் பயன்படுத்துகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..
தேர்தலுக்கு முன், முதல்வர் பகவந்த்மான், அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு குறித்த ஒரு பெரிய விமர்சனத்தை முன் வைத்தார். ஆனால் இப்போது அவரது குடும்பத்தினர் அரசியல் தலைவர்களை விட அதிக பாதுகாப்பை பயன்படுத்துகின்றனர். அவர்கள் தெளிவாக தங்கள் அதிகாரங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள்.. பஞ்சாப் கஜானாவை வீணடிக்கிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பாதுகாப்பை எடுத்துக்கொள்வதற்கும் அல்லது அரசு வாகனங்களைப் பயன்படுத்துவதற்கும் எதிராக வாதிடும் அரவிந்த் கேஜ்ரிவாலின் 'ஆம் ஆத்மி கட்சி'யின் அடிப்படை உண்மை இதுதான்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“மேலும் 1.5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்..” சூரத்தில் பிரதமர் மோடி பேச்சு..
குர்ப்ரீத் கவுர் ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள அரசு குண்டு துளைக்காத லேண்ட் குரூசர் காரை பயன்படுத்துகிறார். அவர்களின் பாதுகாப்பிற்காக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் அம்மாவும் சகோதரியும் கூட பெரிய கான்வாய் மற்றும் பாதுகாப்பைப் பயன்படுத்துகிறார்கள். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு, தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பலத்த பாதுகாப்பை பகவந்த் மான் விமர்சித்து வந்தார். இப்போது அவரது குடும்ப உறுப்பினர்கள் தலைவர்களிடமிருந்து அதிக பாதுகாப்பைப் பெறுகிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் அடிப்படை உண்மை இதுதான்.