Solar Explosive Company : நாக்பூர் அருகே உள்ள ஒரு வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று ஞாயிற்று கிழமை காலை பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பசர்கான் கிராமத்திற்கு அருகே உள்ள சோலார் வெடி மருந்து நிறுவனத்தில் தான் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடம்..! சூரத் வைர பரிமாற்ற வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..
undefined
வெடி விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகளின் அளித்த தகவலின்படி, இந்த வெடிப்பு சம்பவம் நடந்தபோது அந்த சோலார் நிறுவனத்தின் அலகுக்குள், மொத்தம் 12 தொழிலாளர்கள் இருந்தனர் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் காஸ்ட் பூஸ்டர் ஆலையில் தான் இந்த வெடிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வெடிவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
நாக்பூர் (கிராமப்புறம்) காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் போதார் கூறுகையில், "சோலார் வெடிபொருள் நிறுவனத்தில் உள்ள வார்ப்பிரும்பு ஆலையில் பேக்கிங் செய்யும் நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்று கூறியுள்ளார். உள்ளே 12 தொழிலாளர்கள் வேலை செய்து வந்த நிலையில், அவர்களில் 9 பேர் பரிதாபமாக இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.