விமானத்தில் குடிபோதையில் இருந்த முதல்வர்.. உடனே இறக்கிவிடப்பட்டாரா ? முதல்வர் பகவந்த் மான் - பரபரப்பு சம்பவம்

By Raghupati R  |  First Published Sep 19, 2022, 5:44 PM IST

குடிபோதையினால் விமானத்தில் இருந்து முதல்வர் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் இருக்கிறார். இந்நிலையில் ஷிரோமணி அகாலி தள தலைவர் சுக்பிர் சிங் பாதல் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மீது குற்றஞ்சாட்டி உள்ளார். அதில், ‘விமானத்தில் நன்றாக குடித்து விட்டு போதையில் இருந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டார்.

மேலும் செய்திகளுக்கு..“எட்டப்பன் ஓபிஎஸ்சுக்கு ஒரே வழி.. ஸ்டாலினுக்கு நாட்டுல நடக்குறதே தெரியாது”.. அலறவிட்ட சி.வி சண்முகம் !!

Tap to resize

Latest Videos

லுப்தான்சா விமானத்தில் அதிக போதையில் நடக்க கூட முடியாமல் பகவந்த் இருந்துள்ளார் என சக பயணிகள் கூறிய தகவல் தற்போது ஊடகங்களில் வெளி வந்துள்ளது. இதனால், விமானம் 4 மணி நேரம் தாமதமாக சென்றது. இதன்மூலம் பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய மாநாட்டுக்கு கலந்து கொள்ள முடியவில்லை.

மேலும் செய்திகளுக்கு..நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி.. அதிமுக முக்கிய பிரமுகர் சிக்னல் - அதிர்ச்சியில் எடப்பாடி

இது உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபியர்களுக்கு ஏற்பட்ட தலைகுனிவு ஆகும்.இந்த தகவலை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?

click me!