இனி 3 மணி நேரத்தில் கொரோனாவைக் கண்டறியலாம்... பிரசவத்திற்கு முன்பு சாதித்த இந்தியப் பெண்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 30, 2020, 9:52 AM IST
Highlights

நிறைமாத கர்ப்பிணியான பெண் வைராலஜிஸ்ட் ஒருவர் தனது பிரசவத்திற்கு சில மணி நேரங்களே இருந்த போதும் மாபெரும் சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார். 
 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இந்தியாவில்  இதுவரை இந்த வைரஸால் 1024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 27 பேர் உயிரிழந்துள்ளனர். வல்லரசு நாடுகளே கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணியான பெண் வைராலஜிஸ்ட் ஒருவர் தனது பிரசவத்திற்கு சில மணி நேரங்களே இருந்த போதும் மாபெரும் சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய பயன்படும் கருவி இதுவரை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. புனேவில் உள்ள  “மை லேப் டிஸ்கவரி” (MYlab Discovery) நிறுவனம், அரசிடன் சோதனைக் கருவிகளைத் தயாரிக்கவும், விற்கவும் முழு ஒப்புதல் பெற்ற முதல் இந்திய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தைச்  சேர்ந்த ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையின் தலைவர் மினல் தகாவே போஸ்லே, கொரோனா வைரஸ் தாக்கத்தை கண்டறிய பயன்படும் கருவியை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கினார். 

நிறைமாத கர்ப்பிணியான மினல் தகாவே போஸ்லே, தனக்கு குழந்தை பிறக்க சில மணித் துணிகளே இருந்த போதும், பிரசவ வலியின் நெருக்கடிகளை எல்லாம் தாங்கிக் கொண்டு நாட்டின் நலனுக்காக போராடியுள்ளார். 

பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கிளம்பும் கடைசி நேரம் வரை தீவிர ஆய்வில் ஈடுபட்ட மினல், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா வைரஸ் கருவியை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவிட்டு தான் சென்றுள்ளார். 

4 மாத பணியை வேறும் 6 வாரங்களில் முடிந்து நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ள மினல் தகாவே போஸ்லேவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...!

தற்போது இரட்டை குழந்தைக்கு தாயாகியுள்ள மினல் தகாவே போஸ்லே கண்டுபிடித்துள்ள கொரோனா கிட் மூலம் 100 மாதிரிகள் வரை சோதிக்க முடியும், இதற்கு வெறும் ரூ.1200 மட்டுமே செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!