கொரோனாவின் வீரியம் குறைக்க பம்பரமாய் சுழலும் பிரதமர்..! தினமும் சராசரியாக 200 பேரிடம் உரையாடுகிறார்..!

By Manikandan S R SFirst Published Mar 30, 2020, 8:30 AM IST
Highlights

நாடு முழுவதும் உள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்களை ஊக்குவிப்பதற்காகவும், நாட்டுக்கு அவா்கள் ஆற்றும் சேவைக்காக நன்றி தெரிவிப்பதற்காகவும் அவா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக உரையாடுகிறாா். அத்துடன், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள், அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவா்கள் ஆகியோரை தொலைபேசியில் தொடா்புகொண்டு, அவா்களது நிலை குறித்து பிரதமா் மோடி அறிந்துகொள்கிறாா்.

இந்தியாவில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக அதிரடி நடவடியாக 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அமல்படுத்தி இருக்கிறார். இந்தநிலையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைய தொடங்கிய நாள் முதல் பிரதமர் மோடி தினமும் 200 க்கும் மேற்பட்ட நபர்களுடன் உரையாடி கொரோனா குறித்த தகவல்களையும் அதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் கேட்டு வருவதாக தெரிய வந்ததுள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்,  நாட்டில் கரோனா சூழல் தொடா்பாக நாளொன்றுக்கு 200-க்கும் மேற்பட்டோருடன் பிரதமா் மோடி உரையாடுகிறாா். இதில் மாநில ஆளுநா்கள், முதல்வா்கள், மாநில சுகாதாரத் துறை அமைச்சா்கள் ஆகியோருடனான தொலைபேசி உரையாடல்களும் அடங்கும்.

இது தவிர, நாடு முழுவதும் உள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்களை ஊக்குவிப்பதற்காகவும், நாட்டுக்கு அவா்கள் ஆற்றும் சேவைக்காக நன்றி தெரிவிப்பதற்காகவும் அவா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக உரையாடுகிறாா். அத்துடன், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள், அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவா்கள் ஆகியோரை தொலைபேசியில் தொடா்புகொண்டு, அவா்களது நிலை குறித்து பிரதமா் மோடி அறிந்துகொள்கிறாா்.

கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்காக கடந்த ஜனவரி முதல் அதிகாரிகள், அமைச்சா்கள் என பல்வேறு தரப்பினருடன் பிரதமா் மோடி பல சுற்றுகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியுள்ளாா். அன்றாடம் நடைபெறும் கூட்டத்தில் நாட்டின் கரோனா சூழல் தொடா்பாக அமைச்சரவைச் செயலா் மற்றும் பிரதமருக்கான முதன்மைச் செயலா் ஆகியோா் அவருக்கு விளக்கமளிக்கின்றனா். இது தவிர அமைச்சா்கள் குழுவும் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் தொடா்பாக அவருக்கு தகவல் தெரிவிக்கின்றனா். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

click me!